சென்னை: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. நினைவு தினத்தை ஒட்டி இன்று சென்னை மெரினா கடற்கரையில் கலைஞரின் நினைவிடத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அரசியல், திரைத்துறை, பத்திரிகை என பல துறைகளிலும் சாதனை படைத்த வித்தக தலைவர் ஆவார். அவர் மறைந்து இன்றோடு 6 வருடம் பூர்த்தியாகிறது. ஆறாவது நினைவு தினத்தையொட்டி இன்று அமைதி பேரணி நடைபெறும் என ஏற்கனவே திமுக அறிவித்திருந்தது.
முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் திரளான திமுக தலைவர்கள், தொண்டர்கள், அமைச்சர்கள் பங்கேற்ற அமைதிப் பேரணி நடைபெற்றது. பேரணி சென்னை அண்ணா சாலையில் தொடங்கி வாலாஜா சாலை வழியாக கடற்கரை நினைவிடத்தை அடைந்தது. முன்னதாக முதல்வர் மு க ஸ்டாலின் ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு இன்று காலை 7 மணிக்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மெரினா கடற்கரை கலைஞரின் நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்கள், தொண்டர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திமுக சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, கருணாநிதி நினைவு தினத்தையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விடுத்திருந்த எக்ஸ் பதிவில், மக்களிடையே வெறுப்பினை பரப்பியேனும் அரசியலில் பிழைத்திருக்க நினைப்போர் பலர் உண்டு. அன்பை மட்டுமே விதைத்து தமிழ்நாட்டு அரசியலை பிழைக்க வைத்தவர். நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ஒப்பீட்டு எல்லையை இந்திய ஒன்றியம் தாண்டி உலக நாடுகள் வரை கொண்டு சேர்த்தவர். ஆதிக்கத்துக்கு எதிரான அரசியல் வளர்ச்சியை நோக்கிய நிர்வாகம் என திராவிட இயக்க கொள்கைகளின் வழியில் திராவிட மாடலுக்கு அடித்தளம் அமைத்தவர் நம் கலைஞர் என புகழாரம் சூட்டியிருந்தார்.
திருச்சியில் கருணாநிதி சிலை திறப்பு:
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆறாவது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று திருச்சியில் அவரது உருவச் சிலையை முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே. என். நேரு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்பி கனிமொழி ஆகியோா் உடன் இருந்தனர்.
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை
திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை..பாமக கூறி வந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது: அன்புமணி
10 கிராம் தங்கத்தோட விலை என்ன தெரியுமா.. தீபாவளியையொட்டி வச்சு செய்யும் நகை விலை!
நிதீஷ் குமார் நிச்சயம் முதல்வராக மாட்டார்.. பாஜக முடிவெடுத்து விட்டது.. சொல்கிறது காங்கிரஸ்
{{comments.comment}}