திமுகவும் வேட்பாளர் நேர்காணலுக்கு தேதி குறித்தது.. மார்ச் 10ம் தேதி.. களை கட்டுகிறது அறிவாலயம்!

Mar 07, 2024,09:53 PM IST

சென்னை: அதிமுக தனது வேட்பாளர் நேர்காணலுக்கான தேதியை அறிவித்த நிலையில் தற்போது திமுகவும் நேர்காணலுக்கான தேதியை அறிவித்துள்ளது. மார்ச் 10ம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் படு வேகமாக முன்னேற்பாடுகளில் இறங்கியுள்ளன. தொகுதிப் பங்கீடு, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது, கூட்டணிக் கட்சிகளை முடிவு செய்வது என்று தீவிரமாக உள்ளன.


இந்த நிலையில் திமுகவும் அதிமுகவும் தற்போது வேட்பாளர் நேர்காணலுக்கான தேதிகளை அறிவித்துள்ளன. மாலையில் அதிமுக நேர்காணலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது திமுகவின் நேர்காணல் தேதிகளும் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:




நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்திற்கு விண்ணப்பம் தந்துள்ளவர்களை கழகத் தலைவர் மு க ஸ்டாலின் வருகிற 10.3.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலக்கில் உள்ள கழக அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து, அறிந்திட இருக்கிறார். 


இந்நேர்காணலின்போது அந்தந்த நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த மாவட்ட கழக செயலாளர்கள் மட்டுமே இந்நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.


வேட்புமனை அளித்தவர்கள் தங்களுக்கென ஆதரவாளர்களையோ பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும் அவர்களை எல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார் துரைமுருகன்.


மார்ச் 2வது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே திமுக, அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்