ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம்.. நியூயார்க் கோர்ட்டில் டிரம்ப் கைது

Apr 05, 2023,09:15 AM IST
நியூயார்க்:  ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டேணியல்ஸுக்குப் பணம் கொடுத்த வழக்கில் நியூயார்க் கோர்ட்டில் சரணடைந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட்டார்.

டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு பல்வேறு பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்தது. குறிப்பாக ஸ்டோர்மி டேணியல்ஸ் என்ற ஆபாசப் பட நடிகை பகிரங்கமாக பல்வேறு புகார்களை எழுப்பியிருந்தார். தனக்கும் டிரம்ப்புக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும், அதிபர் தேர்தல் சமயத்தில் இதுகுறித்து தான் வாய் திறக்காமல் இருக்க டிரம்ப் தனக்கு 1.30 லட்சம் டாலர் கொடுத்து வாயடைத்ததாகவும் ஸ்ட்ரோமி கூறியிருந்தார். இதை டிரம்ப் மறுக்க முடியாது என்றும், அவரை நான் நிர்வாண கோலத்திலேயே பார்த்ததாகவும் அவர் அதிரடியாக கூறியிருந்தார்.



டிரம்ப்பின் 3வது மனைவி மெலனியாவுக்கு அப்போதுதான் குழந்தை பிறந்திருந்ததாகவும், அந்த சமயத்தில்தான் டிரம்ப் தன்னுடன் உல்லாசமாக இருந்ததாகவும் ஸ்டோர்மி கூறியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டை டிரம்ப் மறுத்தார். ஆனால் ஸ்டோர்மிக்கு அவர் கொடுத்த பணத்தை தனது தேர்தல் பிரச்சாரச் செலவுக்கணக்கில் சேர்த்திருந்தது அம்பலமானது, அது தொடர்பான ஆவணங்களும் சிக்கின.

இதுதொடர்பாக ஜனநாயகக் கட்சி எம்பி ஒருவர் மன்ஹாட்டன் கோர்ட்டில் டிரம்ப் மீது வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் கடந்த வாரம் டிரம்ப் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். அமெரிக்க வரலாற்றில் ஒரு முன்னாள் அதிபரை கிரிமினல் வழக்கில் குற்றவாளி என்று அறிவித்தது இதுவே முதல் முறையாகும் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து டிரம்ப் நேற்று கோர்ட்டில் ஆஜரானார். அப்போது அவர் கைது செய்யப்பட்டார். முன்னதாக கோர்ட்டில் ஆஜரான டிரம்ப் தன் மீது கூறப்பட்ட 34 குற்றச்சாட்டுக்களையும்  பொய் என்று கூறி நிராகரித்தார். கோர்ட்டுக்கு வெளியே டிரம்ப் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் பெருமளவில் திரண்டு போராட்டங்களை நடத்தியபடி இருந்தனர். இதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

டிரம்ப் கைது செய்யப்பட்டாலும் கூட அவருக்கு கை விலங்கு போடப்படவில்லை .  கைது நடவடிக்கைக்குப் பிறகு பிற சம்பிரதாயதங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் டிரம்ப் சட்டப்படி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் டிசம்பர் மாதம் மீண்டும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் ஆவேசமாக எழுதுவதை டிரம்ப் நிறுத்த வேண்டும் என்றும் நீதிபதி கண்டிப்புடன் கூறினார். 

அதன் பின்னர் 2024 அதிபர் தேர்தலுக்கான நிதி சேகரிப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டார் டிரம்ப். அப்போது, 
தன்னை அரசியல் ரீதியாக பழி தீர்ப்பதாக அதிபர் ஜோ பிடன் மீது குற்றம்சாட்டினார். இது அரசியல் பழிவாங்கல், அமெரிக்கா நரகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் இப்படி நடக்கும் என்பதை நான் கனவில் கூட நினைத்தது இல்லை.. நிச்சயம் நினைத்துப் பார்க்கவில்லை என்றார் அவர்.

டிரம்ப் மீது மேலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றியை ஏற்காமல் அவரது ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையில் உள்ள கேப்பிடல் அலுவலகப் பகுதியில் நடத்திய வன்முறை தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிலும் டிரம்ப்புக்கு கடும் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

இங்கிலாந்து சென்று தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க போகிறேன்: முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்!

news

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க.. திமுக கையில் இருக்கும் 4 மேட்டர்!

news

டிரம்ப் வரியால் விபரீதம்..பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு..2 நாட்களில் ரூ. 9.69 லட்சம் கோடி இழப்பு

news

அதிரடியாக ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை... சவரன் 76,000த்தை கடந்தது!

news

திராவிட அரசு பொய்யான, மோசடியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது: அன்புமணி!

news

கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்: பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!

news

விஷால்- சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்...பிறந்தநாளில் எளிமையாக நடந்தது

news

திமுக - தேமுதிக கூட்டணிக்கு வேட்டு வைக்குமா.. தனலட்சுமி சீனிவாசன் கிட்னி முறைகேடு விவகாரம்?

news

Pillaiyar: விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வந்தது எப்படி?

அதிகம் பார்க்கும் செய்திகள்