President Donald Trump.. அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றார்.. டொனால்ட் டிரம்ப்!

Jan 20, 2025,09:09 PM IST

வாஷிங்டன்: அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார்.  இந்த விழாவில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.


அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்றார். வெள்ளை மாளிகையில் இந்த பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சீதோஷ்ண நிலை சரியில்லாமல் இருப்பதால் இந்த முறை உள்ளரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்றது.




அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் ஜூனியர், டொனால்ட் டிரம்ப்புக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார். 2வது முறையாக டிரம்ப் அதிபராகப் பதவியேற்றுள்ளார். துணை அதிபராக வான்ஸ் பதவியேற்றுக் கொண்டார்.


அதிபராகப் பதவியேற்ற பின்னர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், அமெரிக்காவுக்கு இன்றைய தினம் விடுதலை தினமாகும். அமெரிக்காவின் இறையாண்மையை மீட்டெடுக்கப் பாடுபடுவேன். இந்த நிமிடத்திலிருந்து அமெரிக்காவின் சரிவு முடிந்து விட்டது. பல்வேறு துரோகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்திய தேர்தல் முடிவுகள் அமைந்தன. மக்களுக்கு அவர்கள் இழந்த நம்பிக்கை, வளம், ஜனநாயகம், விடுதலை ஆகியவற்றை திரும்பக் கொடுத்துள்ளேன் என்றார் டிரம்ப். டிரம்ப் இவ்வாறுப் பேசும்போது பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அதிபரான ஜோ பைடன் எந்தவிதமான சலனமும் இல்லாமல் புன்னகையுடன் கவனித்துக் கொண்டிருந்தார்.


முன்னதாக  தனது மனைவி மெலனியாவுடன் சர்ச்சில் சிறப்புப் பிரார்த்தனையில் பங்கேற்ற டொனால்ட் டிரம்ப் பின்னர் வெள்ளை மாளிகைக்கு வருகை தந்தார். அவரை ஓய்வு பெறும் அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். பின்னர் டிரம்ப் தம்பதிக்கு பைடன் தம்பதி தேநீர் விருந்தளித்துக் கெளரவித்தது. அதைத் தொடர்ந்து பைடன் தம்பதியும், டிரம்ப் தம்பதியும் கேபிடலுக்கு காரில் வந்தனர். அங்கு பதவியேற்பு விழா நடைபெற்றது.




டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். பல்வேறு நாட்டு தூதர்கள், ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக், எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க், அமேஜான் நிறுவனத்தின் ஜெப் பெஜாஸ், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்ட டெக் தலைவர்கள் ஆகியோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.


முன்னாள் அதிபர்களான பில் கிளிண்டன், அவரது மனைவி ஹிலாரி, ஜார்ஜ் புஷ் அவரது மனைவி லாரா, பராக் ஒபாமா ஆகியோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் நாளை மிதமான மழை செய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

அம்மா ஜெயலலிதா இருந்த இடத்தில் தற்போது மோடி இருக்கிறார்: டிடிவி தினகரன் பேட்டி!

news

தவெக தலைவர் வாயில் வடை சுடுகிறார்.. இவருக்கு என்ன அவ்வளவு பெரிய கூட்டமா?-செல்லூர் ராஜூ விமர்சனம்!

news

பனையூர் பண்ணையார் அவர்களே.. விஜய்யை நோக்கி அதிரடியாக திரும்பிய அதிமுக..!

news

ஊழலும் இல்லை, தீய சக்தியும் இல்லை; அதனால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை - நயினார் நாகேந்திரன்

news

77-வது குடியரசு தினம்.. சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி

news

நான் என்ன சொல்ல வந்தேன்னா.. விசிக குறித்துப் பேசியது தொடர்பாக.. ஆதவ் அர்ஜூனா விளக்கம்!

news

தஞ்சையில் திமுக மகளிர் அணி மாநாடு: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!

news

அதிரடி சரவெடி... மீண்டும் வேகமெடுத்து வரும் தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்