- முனைவர் கோ. லதா
சென்னை: சங்கத் தமிழ் இலக்கிய பூங்கா தர்மபுரியில் நடத்திய சர்வதேச மகளிர் தினம் மற்றும் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கவியரங்கம் கருத்தரங்கம் விருது வழங்கும் விழா நிகழ்வில் நல்லாசிரியர் முனைவர் லதா அவர்களுக்கு சாதனை மகளிர் விருது கேடயமும் உலக சாதனை சான்றிதழ் மற்றும் கவி முதல்வர் உலக சாதனை விருது கேடயமும் பொன்னாடையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தொடர்ந்து 100 நாட்கள் உலக சாதனை தமிழ் இலக்கிய நிகழ்வுகளில் கருத்தரங்கம் கவியரங்கம் இசையரங்கம் பட்டிமன்றம் சங்க இலக்கியங்கள் தமிழ் கலை பண்பாடு குறித்த நிகழ்வுகளில் பங்கு பெற்றமையை பாராட்டி அமெரிக்க முத்தமிழ் உலக சாதனை ரெக்கார்ட்ஸ் அமெரிக்கா, உலக சாதனை சான்றும் கவி முதல்வர் விருது கேடயமும் வழங்கி கௌரவித்துள்ளது.
ஸ்டெப் டி வி, தமிழருவி வானொலி, நூல்வயல் பதிப்பகம் நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்திருந்தது. மாமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய சந்திரன் அவர்களும், முன்னாள் மாமன்ற உறுப்பினர் திருமதி லலிதா அவர்களும் பாராட்டி வாழ்த்து கூறினர்.
சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா நிறுவனர் பாரதிச்சுடர் நீலகண்ட தமிழன் அவர்கள் நல்லாசிரியர் லதா அவர்களுக்கு உலக சாதனை சான்றும் உலக சாதனை விருதும் கவி முதல்வர், சாதனை மகளிர் விருது கேடயங்களை வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியாளர்கள் பலரும் இதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
சங்கத் தமிழ் இலக்கியப் பூங்காவின் கவிதைத் தொடர் நிகழ்ச்சிக்காக முனைவர் கோ. லதா எழுதிய ஒரு கவிதை..

ஙனம் அறிந்து செய்.. இடம் அறிந்து செய்
ஞாலம் அறிந்து செயல் புரிவாய்
கழகம் அறிந்து முழக்கம் செய்வாய்.
சூழல் அறிந்து வார்த்தை பேசுவாய்
சுகம் அறிந்து உணவு உண்பாய்
இடம் அறிந்து நின்றால் வெற்றி
இனம் அறிந்து பழகினால் நிம்மதி
வல்லமை அறிந்து பணி செய்வாய்
வழக்கு அறிந்து நீதி உரைப்பாய்
தகுதி அறிந்து பொறுப்பு எடுப்பாய்
தரம் அறிந்து பொருளை வாங்குவாய்
உதவி அறிந்து நன்றி சொல்வாய்,
உண்மை அறிந்து நட்பில் இருப்பாய்,
மதி அறிந்து காரியம் துணிவாய்
மனம் அறிந்து அன்பினை பொழிவாய்
இடம் அறிந்து செயல் செய்திடவே
இகபர சுகங்கள் வந்து சேருமே
--
முனைவர் கோ. லதாவின் மேலும் சில கவிதைகள்
புத்தம் புது பூமி வேண்டும்
புதிய உலகம் புதுமையான மனிதர்கள்
யுத்தம் இல்லாத பூமி வேண்டும்
ஒருசத்தம் இல்லாமல் இருத்தல் வேண்டும்
தமிழ்மொழி செழித்து ஓங்க வேண்டும்
அயல் மொழி அகன்றிடல் வேண்டும்
உயிரும் மெய்யும் உயிர்மெய்யும்
இணைந்து அகரம் ஆட்சியாதல் வேண்டும்
அன்பு மழை பொழிய வேண்டும்
அதிகார வர்க்கங்கள் ஒழிந்திடல் வேண்டும்
தகைசால் சான்றோர் பெருகிடல் வேண்டும்
ஆன்றோர் அழைப்பில் மகிழ்ந்திட வேண்டும்
வேண்டுவன வேண்டுதல் வேகமாதல் வேண்டும்
நித்தம் ஒரு ஆகாயம் வேண்டும்
ஆகாய நிலவில் தமிழ்மழை பெய்ய வேண்டும்
விண்மீன் தமிழ் போற்ற வேண்டும்
நட்சத்திரம் தமிழ்மொழிக்கு ஒளிதர வேண்டும்
காற்றில் தமிழ்மொழி கீதமாக வேண்டும்
கானக்குயில்கள் தமிழ்வாழ்த்து பாடிட வேண்டும்
ஆகாயத்தாமரை தமிழில் மலர வேண்டும்
--
இரு விழிகள்
அடை மழை நாளில்
சன்னல் திறந்தேன்
மைதீட்டிய விழியால்
மையல் கொண்டேன்
ஊமை மொழியாய்
கண்ணீர் துளி
வார்த்தை வராமல்
இருவிழிகள் பேசின!
Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!
FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!
Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!
Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)
Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!
தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!
இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
{{comments.comment}}