சென்னை: திமுக அரசை கண்டித்து 3 நகரங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறிது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடும் என்று கூறி, பொய்யான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து திமுக, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் 450க்கும் கூடுதலான வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. தமிழ்நாட்டில் ஐந்தரை லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்த திமுக அரசு, ஓய்வு பெற்றவர்களால் ஏற்பட்ட காலியிடங்களைக் கூட நிரப்ப மறுக்கிறது. குத்தகை முறைப்படி பணி நியமனங்களில் மூலம் இளைஞர்களை அடிமாட்டு ஊதியத்திற்கு பணியமர்த்துகிறது.
தனியா நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக, பன்னாட்டு நிறுவனங்களுக்கு அஞ்சி, உள்ளூர் மக்களுக்கு வேலை உத்தரவாதத்தை மறுக்கிறது. தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், இன்றுவரை அதை நிறைவேற்ற அரசு மறுக்கிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள 69 சதவீதம் இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கைகளையும் மூன்றரை ஆண்டுகளாக செயல்படுத்த திமுக அரசு மறுக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மூன்று தவணைகளில் ரூபாய் 40 ஆயிரம் கோடிக்கும் கூடுதலான மின் கட்டணத்தை உயர்த்தி ஏழை, எளிய மக்களை திமுக அரசு வாட்டி வதைக்கிறது. வீட்டு வரி, குடிநீர்வரி ஆகியவற்றை ஒரே முறையில் 150 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்திய திமுக அரசு, இது போதாது என்று ஒவ்வொரு ஆண்டும் ஆறு சதவீதம் உயர்த்தப்படும் என்று அறிவித்திருக்கிறது. பத்திரப்பதிவு கட்டணம், வாகன வரி என எந்தெந்த வகையில் எல்லாம் மக்களிடம் பணத்தை பறிக்க முடியுமோ? அனைத்து வழிகளிலும் மக்களிடம் பகல் கொள்ளை நடத்துகிறது. திமுகவுக்கு வாக்களித்த அனைவரும் தங்களின் செயலுக்கு வருந்தி பரிகாரம் தேடத் துடிக்கின்றனர்.
அத்தியாவசிய பொருள்களின் விலைகள் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு எட்டாத உயரத்திற்கு சென்றுவிட்டன. ஒரு கிலோ 40 முதல் 50 வரை விற்கப்பட்ட அரிசி,இப்போது 80 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. உளுந்து முதல் துவரம் பருப்பு வரை அன்றாட பயன்பாட்டுக்குத் தேவையான பருப்பு வகைகளின் விலைகள் கிலோ 200 ரூபாய் கடந்து விட்டன. தக்காளியின் விலை கிலோ 120 ரூபாய்யையும், வெங்காயத்தின் விலை கீலோ 100 ரூபாயும் தாண்டிவிட்டன. அதனால் மக்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். அனைத்து நிலையிலும் ஆட்சிக்கு எதிரான அனல் தவிக்கிறது.
இன்னொரு புறம் நெல், கரும்பு, காய்கறிகள் என எந்த வேளாண் விளைபொருட்களுக்கும் உரிய விலை கிடைக்கவில்லை. அரசு அலுவலங்களில் ஊழல் தலை விரித்து ஆடுகிறது. பல இடங்களில் சாலைகள் பாய் போல சுரட்டி வீசும் அளவுக்கு தான் தரம் ஆக உள்ளன. கட்டித்தறப்பு விழா நடத்தப்பட்டு ஆறு மாதங்கள் கூட ஆகாத அரசு மருத்துவமனைகள் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து நோயாளிகள் அலறி அடித்து ஓடும் அவலங்கள் தினமும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. திமுக அரசு என்றாலே அவலம் தான்.
எந்த கோணத்தில் பார்த்தாலும் மக்கள் விரோதம் அரசாக திகழும் திமுக அரசே அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. திமுக அரசின் அவலங்களையும், மக்கள் விரோதப் போக்கையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது பொறுப்புள்ள அரசியல் கட்சிகளின் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் மக்கள் விரோத திமுக அரசுக்கு எதிராக பொதுக் கூட்டங்களை நடத்த பாட்டாளி மக்கள் கட்சி தீர்மானித்து உள்ளது. அதன்படி முதல்கட்டமாக கீழ்கண்ட அட்டவணைப்படி மூன்று பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
3 நகரங்களில் பொதுக்கூட்டங்கள்:
17.10.2024 (வியாழக்கிழமை) மாலை-சிதம்பரம்/ விருத்தாசலம்
20.10.2024 (ஞாயிற்றுக் கிழமை) மாலை-திண்டிவனம்
26.10.2024 (சனிக்கிழமை) மாலை-சேலம்
மேற்கண்ட பொதுக்கூட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான நானும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவத் தலைவர் ஜி கே மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி உள்ளிட்டோர் உரையாற்றுகிறோம். இந்தக் கூட்டங்களில் பாமக மற்றும் அதன் சார்பு, இணை அமைப்புகளின் அனைத்து நிலை நிர்வாகிகளும் பொதுமக்களும் பெரும் அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
{{comments.comment}}