பாமக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் : டாக்டர் ராமதாஸ் அதிரடி

Sep 11, 2025,06:36 PM IST

விழுப்புரம் : பாமக.,வின் செயல் தலைவர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் அன்புமணி உடனடியாக நீக்கப்படுவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.


பாமக.,வில் ராமதாஸ்- அன்புமணி இடையே பல மாதங்களாக அதிகார போக்கு நிலவி வருகிறது. கட்சியின் செயல் தலைவரான அன்புமணி மீது ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை ராமதாஸ் முன் வைத்தார். இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாதத்தில் அன்புமணி தலைமையில் போட்டி பொதுக் குழு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுகு்குழுவில் ஒழுங்கு நடவடிக்கை குழுவை ஏற்படுத்தி, அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டது. இதற்கு விளக்கம் அளிக்க அன்புமணிக்கு 10 நாட்களுக்கு கெடு விதிக்கப்பட்டது. 


இருந்தும் அன்புமணி தரப்பில் எந்த விளக்கமோ பதிலோ அளிக்கப்படவில்லை. இதனையடுத்து மீண்டும் 10 நாட்கள் அன்புமணிக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. இருந்தும் இதுவரை அன்புமணி தரப்பில் எந்த விளக்கமோ, மறுப்போ தெரிவிக்காமல் இருந்த நிலையில் இன்று விழுப்புரத்தில் உள்ள தைலாபரத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அன்புமணி மீது சுமத்தப்பட்ட 16 குற்றச்சாட்டுக்களுக்கு இரு முறை அவகாசம் அளித்தும் இதுவரை அன்புமணி தரப்பில் எந்த விளக்கமோ, மறுப்போ தெரிவிக்கப்படவில்லை. இதனால் அவர் மீது கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தெரிவித்த குற்றச்சாட்டுக்களை அவர் உண்மை என்றும், சரியானது என்றும் ஏற்றுக் கொள்வதாக எடுத்துக் கொள்கிறோம்.




இதனால் கட்சியை பிளவுபடுத்தும் வகையில், கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால், அரசியல் தலைவராக இருக்கும் தகுதி இல்லை என்ற காரணத்தால் கட்சியின் செயல் தலைவர் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் உடனடியாக அன்புமணி நீக்கப்படுகிறார்.  கட்சியை சேர்ந்த யாரும் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படி வைத்துக் கொண்டால் அவர்கள் மீதும் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அன்புமணி உடன் சேர்ந்து 10 பேர் அவருக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள். அவர்கள் நான் வளர்த்து விட்ட பிள்ளைகள். அவர்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. அவர்கள் மீது நான் நடவடிக்கை எடுக்கப் போவதும் கிடையாது.


அன்புமணி வேண்டுமானால் தனிக்கட்சி துவக்கிக் கொள்ளலாம். அன்புமணி, என்னுடைய இன்ஷியலை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் பாமக, ராமதாஸ் என்ற தனி மனிதனால் மிகுந்த கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்ட கட்சி. இதில் அன்புமணிக்கு எந்த உரிமையும் கிடையாது. அவர் தனிக்கட்சி துவங்கினாலும் அது வளராது. அன்புமணி நீக்கப்பட்டதால் பாமக.,விற்கு பின்னடைவு என சிலர் நினைக்கலாம். ஆனால் இதனால் பின்னடைவு கிடையாது. விளை நிலத்தில் பயிர்கள் விளைய களை எடுப்பது போல், கட்சியின் வளர்ச்சிக்காக, நன்மை கருதி களைகள் நீக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


கட்சியில் உரிமை கோரியோ, கட்சி சின்னத்தின் மீது உரிமை கோரியோ அன்புமணி கோர்ட்டிற்கு சென்று விடக் கூடாது என்பதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் நேற்றே, கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது, தன்னை கேட்காமல் இந்த விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என தடை கேட்பதாகும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருவள்ளூருக்கு ஆரஞ்சு...சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

news

2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

news

ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்

news

தங்கம் நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ. 1,200 குறைவு!

news

தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்

news

மக்களே உஷார்...இன்று இரவு கரையை கடக்கிறது மோன்தா புயல்

news

திருச்செந்தூரில் நடைபெறும் சாயா அபிஷேகம் பற்றி தெரியுமா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 28, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிகள்

news

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்