- கவிதாயினி டாக்டர் எஸ். மணிமேகலை
வருகிறேன் தாங்கிக் கொள்வாயா ...மழைத்துளி
வந்துவிடு துடிப்பாய் நிற்கிறேன் ..மலரிதழ்
விழுவேன் என்கிறது மென்மையாய் பனித்துளி
வீழாயோ என்கிறது தன்மையாய் .மலரிதழ்
தாங்கிடுவாயா ஏக்கத்துடன் கேட்கும் மழைத்துளி
வாங்கிடுவேனே காத்து நிற்கிறேன் மலரிதழ்
பாறைமேல் நிற்கிறாயே படபடத்தது மழைத்துளி
தவறிடாமல் பிடிப்பேனே தயக்கமேனோ மலரிதழ்
சிந்துபாடி வந்து சேர்ந்தது மழைத்துளி
சிரிப்போடே வாங்கிக் கொண்டது மலரிதழ்

மலரின் சுகந்தத்தை சுவாசித்தது மழைத்துளி
மழைத்துளியின் ஸ்பரிசத்தை உணர்ந்தது மலரிதழ்
வந்தடைந்த மழைத்துளி எங்கே தான் போனது
விழுந்ததும் மறுநொடி மறைந்தே போனது
தென்றல் காற்றோ வீசிட மலரிதழோபறந்திட
மனசோ படபடக்க கனவோ கலைந்திட
அன்றும் இன்றும் மௌனமாய் மனதிற்குள்
தீண்டும் இன்பம் நினைவலையாய் நெஞ்சிற்குள்
கண்ணாடியில் மின்னி நிற்கும் மழைத்துளியும்
மென்மையாய் மயங்க வைக்கும் மலரிதழும்
இன்றும் என் கனவில் மீண்டும் வருவாயா
(கவிதாயினி டாக்டர் எஸ் மணிமேகலை. செட்டிநாட்டை சேர்ந்த இவர் மதுரையில் பிறந்து வளர்ந்து இன்று ஈரோட்டில் சிறந்த அக்குபஞ்சர் மருத்துவராக உள்ளார். மருத்துவம் தவிர்த்து ஆன்மீக சொற்பொழிவு இசை கலை ஓவியத்திறமை மற்றும் பாடும் புலமை மிக்கவர். சிறந்த கவிஞர், எழுத்தாளர். நமது தென் தமிழ் இணையதளத்தில் மணிமா என்ற பெயரில் செட்டிநாட்டு ரெசிபி எழுதிக் கொண்டிருக்கிறார். தனது பத்தாவது வயதில் மறைந்த கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களிடம் மதுரையில் கவிதாயினி என்ற பெயர் சூட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது)
மக்களுக்கு நல்லது செய்யனும்...நிர்வாகிகளுக்கு அட்வைஸ்: அரசியலுக்கு வர போகிறாரா சிவகார்த்திகேயன்?
அறுபதிலும் அழகாய் மலர்ந்த பூவே!
கோடைக்கால மேகம்!
மன இறுக்கம்!
மழைத்துளியும் ..மலர் இதழும்!
காலை சக்கரம்!
உண்மையைப் பேசிய நன்னிலா.
புத்தகங்கள்.. கள்ளத்தனத்தை களைந்திடச் செய்யும்!!
நான் கம்ப்யூட்டர் கற்ற கதை
{{comments.comment}}