சென்னை: வெயில் கொளுத்தி வருவதால் தண்ணீர் இல்லாமல் கால்நடைகள் உயிரிழக்கும் கொடுமை நடந்து வருகிறது. எனவே, உள்ளாட்சிகளின் சார்பில் கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டிகளை அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோடைகாலம் இந்த முறை மிகக் கொடுமையாக, கடுமையாக உள்ளது. எங்கு பார்த்தாலும் வெயிலின் கொடுமைதான். குளுகுளு ஊட்டியையும் கூட இந்த வெயில் விட்டு வைக்கவில்லை. அங்கேயும் கொளுத்திக் கொண்டுள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் மசினகுடியில் தண்ணீிர் இல்லாமல் மாடுகள் உயிரிழந்து வருவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை விட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர், உணவு இல்லாததால் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளும், மாடுகளும் உயிரிழந்திருப்பது தெரியவந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களில் இல்லாத வகையில் கோடை வெப்பம் அதிகரித்திருப்பதால் ஏற்பட்டுள்ள குடிநீர், உணவு பற்றாக்குறை தான் இதற்கு காரணம். கோடை வெப்பத்தின் விளைவுகளால் கால்நடைகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கோடை வெப்பத்தால் கால்நடைகள் உயிரிழக்கும் நிகழ்வுகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நிகழ்ந்து வருகின்றன. இத்தகைய நிகழ்வுகள் அதிகரிக்காமலும், தொடராமலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உண்டு.
தமிழ்நாட்டில் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு இணையாக கவனிக்க ஆள் இல்லாத சூழலில் வளரும் கால்நடைகளும், லட்சக்கணக்கான தெரு நாய்களும் உள்ளன. கோடை வெப்பம் காரணமாக அவற்றுக்கு உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதில் பெருஞ்சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அதைப் போக்கும் வகையில் தெருக்களில் நடமாடும் கால்நடைகள், தெரு நாய்கள் போன்றவை குடித்து இளைப்பாறுவதற்காக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகளைத் திறக்க தமிழக அரசு ஆணையிட வேண்டும்; அதற்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு நிதியையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
அரசு மட்டுமல்லாமல் தனியார்களும் கூட தங்களது வீடுகளுக்கு முன்பு தொட்டி அமைத்து அதில் தண்ணீர் நிரப்பி வைக்கலாம். ஆடு, மாடு, நாய் போன்ற விலங்கினங்களுக்கு அவை பேருதவியாக இருக்கும்.
Good மாத்ரே, பிரேவிஸ், ஹூடா அதிரடி.. Bad துபே, தோனி.. Ugly கடைசி வரிசை வீரர்கள்.. CSK ஏமாற்றம்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}