சென்னை: திமுக எம்.பி. செந்தில்குமாரின் கோமூத்ரா பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு டிவீட் போட, அதுக்கு நடிகை ஷர்மிளா பதில் டிவீட் போட.. அதுக்கு பாஜகவின் திருச்சி சூர்யா சிவா பதிலடி கொடுக்க ஒரே களேபரமாகிப் போச்சு.
இதுல என்ன காமெடின்னா.. ஷர்மிளாவின் டிவீட்டில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்டுபிடித்து நக்கலடித்திருந்தார் சூர்யா சிவா.. கடைசியில் அவரது டிவீட்டிலும் ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்ததுதான் விசேஷம்!
திமுகவைச் சேர்ந்த தர்மபுரி எம்.பி. டாக்டர் செந்தில்குமார், சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவு தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், இந்தி பெல்ட் அதாவது கோமூத்ரா பெல்ட் எப்போதுமே பாஜகவைத்தான் தேர்ந்தெடுக்கும், அந்த மக்கள் பாஜகவுக்கே வாக்களிக்கின்றனர் என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இதையடுத்து திமுக தலையிட்டு டாக்டர் செந்தில்குமாரை கண்டித்தது. செந்தில்குமாரும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் செந்தில்குமாரின் பேச்சைக் கண்டித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவரும், நடிகையுமான டாக்டர் ஷர்மிளா நக்கலாக ஒரு டிவீட் போட்டிருந்தார்.
அதில், ஏன் மேன் … நீ மட்டும் நமிழ்நாடு குடிகார மாநிலம்னு சொல்லலாம் …அவர் கோமிய மாநிலம்னு சொல்லக்கூடாதா? கோமியத்தை புனிதம்னு சொல்ற குரூப் தானே நீங்க… நியாயமா பாத்தா அவர் சொன்னதுக்கு சங்கிகள் சந்தோஷப்படணும்யா என்று கூறியிருந்தார் ஷர்மிளா.
இதைப் பார்த்ததும் வேகமாக ஓடி வந்தார் திருச்சி சூர்யா சிவா. அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான, பாஜகவைச் சேர்ந்த திருச்சி சூர்யா சிவா கொடுத்த பதிலடியில், அக்கா எங்களுக்கு புத்திமதி சொல்லுறதுக்கு முன்னாடி முதல்ல உன் புத்தியை கொஞ்சம் வளர்த்துக்கிட்டு வா. தமிழ்நாட்டுக்கு ஸ்பெல்லிங் கூட கரெக்டா எழுத தெரியல இதுல பேச்சா பாரு என்று கண்டித்திருந்தார்.
இதுல என்ன காமெடின்னா.. ஷர்மிளா நமிழ்நாடு என்று சொல்லியிருந்தார் என்றால், திருச்சி சூர்யா சிவா தனது டிவீட்டில் பேச்சா பாரு என்று அவரும் ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டிருந்தார்.
ஆக மொத்தம் எல்லாப் பேருமே தப்பு தப்பாதான் பேசிட்டிருக்காங்கப்பா!!
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்
மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்.. கை, கால்களை சுத்தமாக கழுவ செவிலியர்கள் அறிவுரை!
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!
நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!
மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
{{comments.comment}}