சென்னை: இருண்ட ஆட்சியின் அமைச்சரவையிலிருந்து இரண்டு அமைச்சர்கள் நீக்கப்படுகிறார்கள். இது தானாக எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல, தவிர்க்க முடியாமல்தான் எடுத்துள்ளனர் என்று மூத்த பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பொன்முடியும், செந்தில் பாலாஜியும் நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், இரண்டு அமைச்சர்கள்.. இந்த இருண்ட ஆட்சியின் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.. ஒருவர் பொன்முடி மற்றொருவர் செந்தில் பாலாஜி.. இவர்கள் இரண்டு பேரும் நீக்கப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது...
ஒருவர் நீக்கப்படுவது பெண்களுக்கு எதிரான துறையாக கருதப்படும் டாஸ்மாக்கில் முறைகேடு நடந்ததனால்... மற்றொருவர் நீக்கப்படுவது... பெண்களுக்கு எதிராக முறைகேடாக பேசியதால்.. இந்த இரண்டு முறைகேடுகளைப் பற்றி தொடர்ந்து கோரிக்கை வைத்தாலும் முதலமைச்சர் ஸ்டாலின் செவி சாய்க்காமல் இருந்தார்.. இன்று நீதிமன்றத்தின்.. கட்டாயத்தின் பேரிலும் மக்கள் மன்றத்தின் கட்டாயத்தின் பெயரிலும.. இருவரும் நீக்கப்பட்டிருக்கிறார்கள்..
ஆக தவறு செய்தவர்களை.. இனிமேலும் தொடர முடியாது என்ற நிலை வந்ததனால் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது... இல்லையென்றால் தொடர்ந்து இருந்திருப்பார்கள்.. இனிமேல் பொறுக்க முடியாது என்ற சூழ்நிலை வந்ததனால் தான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்களே தவிர இல்லை என்றால் பொறுத்து போயிருப்பார்கள்.
ஆக இந்த நடவடிக்கை.. தானாக எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கை... என்பதை மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.. 2026 திமுகவிற்கு எதிராக பதில் சொல்வார்கள் என்று கூறியுள்ளார் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.
24ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
சென்னையில் எப்ப Rain சீன் தெரியுமா.. 23 டூ 30.. செம மழை இருக்காம்.. என்ஜாய் பண்ண ரெடியாகுங்க!
கச்சத்தீவை மீட்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
கரூர் உயிரிழப்பு சம்பவம்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது: சீமான்!
அன்புமணி தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்வது நல்லது.. கட்சி தொடங்குமாறு 3 முறை சொல்லி விட்டேன்: ராமதாஸ்!
ரயில் பயணிகளுக்கு புதிய வசதி.. கேன்சல்லேஷன் கட்டணம் இல்லாமலேயே டிக்கெட்டை மாத்திக்கலாம்!
புதிய உச்சத்தில் தங்கம் விலை...ஒரு கிராம் ரூ.12,000 ஐ நெருங்கியது... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
ரஷ்ய எண்ணெயை வாங்க மாட்டோம்.. பிரதமர் மோடி உறுதியளித்ததாக டிரம்ப் தகவல்.. ராகுல் காந்தி கண்டனம்
{{comments.comment}}