சென்னை : தமிழக கல்வியை கலைஞர்மயமாக்க திமுக முயற்சி செய்து வருவதாக தமிழக மூத்த பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தர் ராஜன் கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார். அதோடு திமுக.,வையும் மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது நடக்கும் பல்வேறு விவகாரங்கள் குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த தமிழிசை செளந்தர் ராஜன் கூறுகையில், தமிழகத்தில் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்புப் புத்தகங்களில் கலைஞர் கருணாநிதி பற்றிய பாடங்கள் உள்ளன. அவர்கள் மாநிலத்தின் கல்வி முறையை கலைஞர்மயமாக்க விரும்புகிறார்கள்.
தேசிய கல்வி கொள்கையை எப்படி காவிமயமாக்கும் கொள்கை என்று சொல்ல முடியும்? பாஜக அல்லாத பிற அரசுகளும் அதை ஏற்றுக் கொண்டுள்ளன. மும்மொழிக் கொள்கை என்பது இந்தி திணிப்பு ஆகாது. நாங்களும் இந்தி திணிப்பை ஆதரிக்கவில்லை.

நமது பிரதமர், முதல்வர் மு.க.ஸ்டாலினை விட தமிழ் சொற்றொடர்களை அதிகமாகப் பயன்படுத்துகிறார். திமுக தமிழ் மொழியை மோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர். குழந்தைகள் தமிழ் படிக்கவில்லை. இருமொழி முறையில் கூட அவர்கள் தமிழ் படிக்கவில்லை.
உதயநிதி ஸ்டாலின் எந்த வகையிலும் தர்மேந்திர பிரதானுக்கு இணையானவர் கிடையாது. அவர் மு.க.ஸ்டாலின் மகன், கருணாநிதியின் பேரன் என்ற காரணத்தால் துணை முதல்வர் ஆனவர். இல்லை என்றால் அவர் கடைசி பெஞ்சில் தான் எப்போதும் இருந்திருக்க வேண்டும். அடி மட்டத்தில் வந்த தலைவரை பற்றி அவர்களால் பேச முடியாது. நாகரிகம் பற்றி பேச திமுக.,விற்கு எந்த உரிமையும் இல்லை. நாகரிகம், கலாச்சாரம் பற்றி எல்லாம் திமுக பேசுவது மிகவும் அபத்தமானது
திமுக அரசு, மக்களின் கவனத்தை அவர்களின் தோல்விகளிலிருந்து முற்றிலுமாக விலக்கி வைப்பதற்கான முயற்சிகளை செய்து வருகிறது. அதில் ஒன்று தான் எல்லை நிர்ணய பிரச்சனை. தமிழ்நாடு நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. தமிழ்நாடு ரூ.8 லட்சம் கோடி கடனில் உள்ளது. இந்த சூழலில் எல்லை நிர்ணய பிரச்சனை எங்கிருந்து வந்தது? மற்ற மாநநிலங்களுக்கு சென்று இவர்கள் ஆதரவு பெற முயற்சி செய்து வருவது முக்கியமா? மற்ற மாநிலத் தலைவர்களுக்கு அதைப் பற்றிய தெரியாது என்பது போல இவர்கள் போல் விளக்கி கூறி வருகிறார்கள்.
எல்லை நிர்ணயம் எப்படி செயல்படுத்தப்பட போகிறது என்றால், அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும். பிறகு அனைத்து கட்சி கூட்டத்திலும் வெளிப்படையான விவாதம் நடத்தப்படும். அதற்கு பிறகு தான் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும். அதெல்லாம் நடக்கும் வரை அவர்களால் ஏன் காத்திருக்க முடியவில்லை? திமுக கடுமையான நெருக்கடியிலும், துயரத்திலும் இருப்பதையே இது காட்டுகிறது.
ஏன் இந்த நாடகம்?
திமுக, தமிழ்நாட்டை இத்தனை வருடங்களாக ஆட்சி செய்து, பலமுறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்கள். ஏன் இப்படி நாடகமாக்க விரும்புகிறார்கள்? அவர்கள் இத்தனை வருடங்களாக மத்தியில் இருந்தார்கள். அப்போது ஏன் இந்த முடிவை எடுக்கவில்லை?
இந்திய நாணய சின்னம் என்பது ஒரு தேசிய சின்னம். கூட்டாசி அமைப்பில் அங்கம் வகிக்கு மாநில அரசு என்ற முறையிங் தேசிய சின்னங்களை அவர்கள் மதிக்க வேண்டும். அதற்காக நாங்கள் தமிழ் சின்னங்களையோ அல்லது தமிழ் மொழியையோ எதிர்க்கிறோம் என்று அர்த்தம் கிடையாது. நாங்கள் அதுற்கும் ஆதரவாக இருக்கிறோம்.
எனக்கு பெயர் கூட தமிழ் இருக்கிறது. ஆனால் மு.க.ஸ்டாலினுக்கு அதுவும் இல்லை. தமிழக அரசியல் தோல்விகளை ஒப்புக் கொள்ள முடியாமல் அவர்கள் அதை எல்லாம் செய்கிறார்கள். திமுக தமிழை வளர்ப்பது போது நாடகமாடுகிறது. முதலில் அவர்கள் தமிழ்நாட்டை வளர்க்க வேண்டும் என்றார்.
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு.. எதுக்காக?
விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் கூட்டணி: தவெக கூட்டத்தில் தீர்மானம்
சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!
சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்
சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்துக்கு வாங்க... பாமக நிர்வாகிகள் நேரில் சென்று தவெகவிற்கு அழைப்பு
98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?
தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்... இன்றைய விலை நிலவரம் இதோ
{{comments.comment}}