ஜஸ்ட் 100 நாட்களில் உருவான "உக்கிரம்".. அதி வேக துப்பாக்கி.. டிஆர்டிஓவின் அசத்தல் சாதனை!

Jan 10, 2024,06:14 PM IST

ஹைதராபாத்:  மத்திய அரசின் பாதுகாப்பு ஆய்வு வளர்ச்சிக் கழகம் (டிஆர்டிஓ) அதி நவீன துப்பாக்கி ஒன்றை ஜஸ்ட் 100 நாட்களில் உருவாக்கி சாதனை படைத்துள்ளது. ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை, காவல்துறை ஆகியவற்றின் தேவைக்காக இந்த துப்பாக்கி தயாரிக்கப்பட்டுள்ளது.


தற்போது இந்திய பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தி வரும் இன்சாஸ் துப்பாக்கியை விட இது இலகுவானது, எளிமையானது.. அதேசமயம் சக்தி வாய்ந்தது. ஹைதராபாத்தில் உள்ள டிஆர்டிஓ அமைப்பின் ஆயுத ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது. 100 நாட்களே ஆயுள்ளது இந்த துப்பாக்கியை வடிவமைத்து உருவாக்குவதற்கு. ஹைதராபாத்தைச் சேர்ந்த திவீபா என்ற தனியார் ஆயுத தளவாட உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து இதை உருவாக்கியுள்ளனர். உக்கிரம் என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. உக்கிரம் என்பதற்கு ஆக்ரோஷம் என்று அர்த்தம் ஆகும்.


இது 7.62 மில்லி மீட்டர்  காலிபர் ரக துப்பாக்கி ஆகும். தற்போது இந்திய பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தி வருவது 5.62 மில்லி மீட்டர் காலிபர் துப்பாக்கியாகும். இது அதை விட அதி நவீனமானது என்பதால் தாக்குதலும் துல்லியமாக இருக்கும்.   ராணுவம், புற ராணுவம், காவல்துறை ஆகியவற்றை மனதில் வைத்து இந்த துப்பாக்கி தயாரிக்கப்பட்டுள்ளது.




500 மீட்டர் தொலைவிலான இலக்கு வரை சுட முடியும். நான்கு கிலோ எடை கொண்டது. 20 ரவுண்டு வரை இதில் சுட முடியும். தானியங்கியாகவும் இதை பயன்படுத்தலாம், சிங்கிள் மோட் துப்பாக்கியாகவும் பயன்படுத்தலாம்.


விரைவில் இந்த துப்பாக்கி சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. அனைத்து வகையான காலநிலையிலும்.. அதாவது கடும் குளிர்,  பனி, நீருக்கு அடியில்  என அனைத்து சூழலிலும் செயல்படும் விதம் குறித்து இது சோதனை செய்து பார்க்கப்படும். அதன் பிறகு இது பயன்பாட்டுக்கு வரும்.


உக்ரம் துப்பாக்கி செயல்பாட்டுக்கு வந்ததும், தற்போது ராணுவம் பயன்படுத்தி வரும் இன்சாஸ் துப்பாக்கிக்கு ஓய்வு தரப்படும். 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரிலிருந்து இன்சாஸ் துப்பாக்கியை இந்திய ராணுவம் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

அதிகம் பார்க்கும் செய்திகள்