11 பாட்டில் மதுவைக் குடித்து விட்டு.. தாய், மகளிடம் சில்மிஷம்.. ஓடும் விமானத்தில் ஷாக்!

Jul 30, 2023,12:55 PM IST
நியூயார்க்: நியூயார்க்கிலிருந்து கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகருக்குச் சென்று கொண்டிருந்த விமானத்தில் பயணித்த ஒரு பயணி, 11 பாட்டில் மதுவை அருந்தி விட்டு, தனக்கு அருகில் பயணித்த தாயையும், அவரது மகளையும் பாலியல் ரீதியாக சீண்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட 9 மணி நேர பயணத்தையும் நரகமாக்கி விட்டார் இந்த குடிகார பயணி. அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்காத டெல்டா ஏர்லைன்ஸ் மீது பாதிக்கப்பட்ட தாயும், மகளும் 20 லட்சம் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

அந்த குடிகாரரின் தொல்லை குறித்து பலமுறை தாயும், மகளும், விமான ஊழியர்களிடம் புகார் கூறியுள்ளனர். ஆனால் அவர்களோ கண்டு கொள்ளவில்லையாம். காதுகொடுத்தும் கேட்கவில்லையாம். மாறாக அந்த குடிகாரர் மது கேட்க கேட்க, கொடுத்துக் கொண்டே இருந்துள்ளனர். கிட்டத்தட்ட 11 மது பாட்டில்களை அவர் குடித்துக் காலி செய்துள்ளார்.




அந்த நபர் மீதும், விமான நிறுவனம் மீதும் தற்போது நியூயார்க் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் தாயும்  மகளும் வழக்குத் தொடர்ந்துள்ளனர். மது போதையில் தங்களிடம் அந்த நபர் அத்துமீறியதாகவும், பொருத்தமில்லாத இடங்களில் தொட்டு அட்டகாசம் செய்ததாகவும், இதுகுறித்து பலமுறை புகார் கூறியும் விமான நிறுவன ஊழியர்கள் அதை கண்டுகொள்ளவில்லை என்றும் அவர்கள் புகாரில் கூறியுள்ளனர்.

மேலும் விமானம் ஏதென்ஸ் வந்து சேர்ந்ததும், அந்த குடிகார நபரை போலீஸில் பிடித்துக் கொடுக்காமல் அவர் வெளியேற விமான ஊழியர்கள் உதவி செய்ததாகவும் வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்த குடிகார நபரின் பக்கத்து சீட்டில் 16 வயதான அந்த சிறுமி அமர்ந்திருந்தார். அவருக்கு அடுத்த சீட்டில் தாய் அமர்ந்திருந்தார். குடிகார பயணி முதலில் சாதாரணமான முறையில் பேசியுள்ளார். ஆனால் சிறுமி அதை விரும்பவில்லை. போதை ஏற ஏற அவரது பேச்சு ஆபாசமாகியுள்ளது, ஆபாச சைகை காட்டியுள்ளார். அட்ரஸ் கேட்டுள்ளார். கெட்ட வார்த்தையிலும் பேசியுள்ளார். அத்துமீறி உடல் ரீதியாகவும் சேட்டை செய்ய ஆரம்பித்துள்ளார். தட்டிக் கேட்ட தாயையும் அவர் திட்டி அத்துமீறி நடந்து கொண்டுள்ளார்.

அக்கம் பக்கத்து பயணிகளும் இதைப் பார்த்து அந்த நபரைக் கண்டித்துள்ளனர். ஆனால் அவர் அடங்கவில்லை. விமான ஊழியர்களும் அவரைக் கண்டிக்காததால், அத்துமீறி நடக்க ஆரம்பித்தார்.

சமீபத்திய செய்திகள்

news

Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!

news

பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

அதிகம் பார்க்கும் செய்திகள்