உதயநிதிக்கு ஏற்றம் இருக்கும்.. துரை முருகனுக்கு ஏமாற்றமாக இருக்கும்.. ரைமிங்காக கலாய்த்த தமிழிசை

Sep 24, 2024,06:03 PM IST

சென்னை:   அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், தனது பாணியில், அது அண்ணன் துரை முருகன் அவர்களுக்கு ஏமாற்றமாகவும், தம்பி உதயநிதிக்கும் ஏற்றமாகவும் இருக்கும் என்று கலாய்த்துள்ளார்.


சிவந்தி ஆதித்தனாரின் 89ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் ஆளுநர் தமிழிசை. அதன்பின்னர் அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சிவந்தி  ஆதித்தனாரின் 89ம் ஆண்டு பிறந்த நாளில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வந்து அஞ்சலி செலுத்தியதற்கு பெருமை கொள்கிறேன்.


வருடா வருடம் வரும் பொழுது, அவர் எந்த அளவிற்கு ஊடகத்திற்கும், சமூகத்திற்கும், ஆன்மீகத்திற்கும், விளையாட்டிற்கும் சேவை செய்தார் என்பதை நாம் ஒவ்வொரு முறை மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்வது வழக்கம். குறிப்பாக இன்று பாரா ஒலிம்பிக்காக இருக்கட்டும், ஒலிம்பிக்காக இருக்கட்டும் பல சாதனைகளை நமது விளையாட்டு வீரர்கள் செய்து வருகின்றார்கள்.  பதக்கங்களை பெற்று வருகிறார்கள். ஆரம்ப காலத்தில் ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக இருந்து அதற்கு அடித்தளம் இட்டவர் சிவந்தி ஆதித்தனார்.




காலை பத்திரிக்கையான தினத்தந்தியை  எளிதாக மக்களுக்கு எடுத்துச் சென்றவர். அடுத்த நாள் வரைக்கும் பத்திரிக்கை வரவில்லை என்றால் அதற்காக மாலை பத்திரிகையும் கொண்டு வந்து ஒரு புரட்சியை செய்தவர். சிவந்தி ஆதித்தனார் அவருக்கு மரியாதை செலுத்துவதில் நான் பெருமை கொள்கிறேன். என்னை பொருத்தமட்டில் தனிப்பட்ட முறையில் எனது வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். மக்களுக்கு விளையாட்டு குறித்து விழிப்புணர்வு இல்லாத பொழுதும் விளையாட்டிற்கு பல ஊக்கத்தை கொடுத்திருக்கிறார்.


மாற்றம் - ஏமாற்றம் - ஏற்றம்!


அழுத்தம் இப்பொழுது பழுத்துக்கொண்டு வருகிறது. ஏமாற்றமாக இருக்காது என்றால் யாருக்கு ஏமாற்றமாக இருக்காது. யாருக்கு ஏற்றமாக இருக்கும் என்பது தான். அண்ணன் துரை முருகன் அவர்களுக்கு ஏமாற்றமாகவும், தம்பி உதயநிதிக்கு ஏற்றமாக இருக்கும். அல்லது யாரெல்லாம் ஏற்றம் பெற போகிறார்கள். யார் எல்லாம் ஏமாற போகிறார்கள் என்பது தான். நிச்சயமாக எல்லோருக்கும் ஏற்றமாக  இருக்கப்போவது இல்லை. இது முதலில் இருந்தே பரவ விட்டு பரவ விட்டு தம்பி உதயநிதிக்கு முடிசூட்டு வதற்காக தான் பரவ விட்டு கொண்டிருக்கிறார்கள்.


எங்களை பொருத்தமட்டில் வாரிசு அரசியல் என்பது பல முதியவர்கள், அனுபவசாலிகள் எல்லாம் இருக்கும் போது இவர்களை போன்றவர்கள் வருவது என்பது அரசாங்கத்திற்கும் நல்லது அல்ல. ஆட்சிக்கும் நல்லது அல்ல. ஜனநாயகத்திற்கும் நல்லது அல்ல என்பதை அழுத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்.


திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் கவுண்டர் பண்ணுகிறார்களா? அல்லது என்கவுண்டர் பண்ணுகிறார்களா என்று தெரியவில்லை. என்கவுண்டர்கள் தற்போது அதிகமாக இருக்கிறது. எதற்கு கோர்ட்டு எதற்கு கேஸ். தவிர்க்க முடியாத காரணங்களாக இருந்தால் பரவாயில்லை. திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு 17 எண்கவுண்டர்கள் நடைபெற்று இருக்கிறது. யாரையோ காப்பாற்றுவதற்காக எண்கவுண்டர்கள் நடக்கிறது. திராவிட முன்னேற்ற கழக ஆட்சி தற்பொழுது வெவெலத்து போயுள்ளது என்பது தான் உண்மை என்றார் அவர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்