விருதுநகர்: தவெக தலைவர் விஜய்க்கு பின்னால் ஒரு இளைஞர் கூட்டம் இருக்கிறது. அவர் ஜாக்கிரதையா இருக்கணும் என்று மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் செய்தியாளர்களிடம் துரை வைகோ பேசுகையில், சகோதர் விஜய் இப்ப தான் அரசிலுக்கு வந்திருக்கிறார். நல்லா படித்தவர் விவரமானவர். அரசியல் என்பது ரொம்ப ரொம்ப கஷ்டமானது. நான் அரசியலுக்கு வந்து 4 வருடங்கள் ஆகிறது. என்ன தான் அரசியல் குடும்பத்தில் பிறந்தாலும் நேரடியாக அரசியலுக்கு வருவது என்பது பல சிரமங்கள் பல கஷ்டங்கள் இருக்கிறது.
சகோதரர் விஜய் கொள்கை ரீதியாக நல்ல விஷயத்தை சொல்லியிருக்கிறார். இங்க மதவாதத்திற்கு இடம் கிடையாது. சமத்துவம், சமூக நீதி தான் கட்சியின் கோட்பாடு என்று சொல்லியிருக்கிறார். ரொம்ப சந்தோஷம். அவருக்கு பின்னால் ஒரு இளைஞர் கூட்டம் உள்ளது. அவர் ஜாக்கிரதையா இருக்கணும். மதவாத சக்திகள் எந்த இடத்திலயும் கால் ஊன்ற அவர் வாய்ப்பு கொடுத்திடக் கூடாது.
அண்ணன் சீமான் இந்த ஜனநாயக நாட்டில் அவர் ஒரு இயக்கத்திற்கு தலைவர். அவருடைய கருத்தை சொல்லுகிறார். ஏத்துக்கிறவங்க ஏத்துக்ககரட்டும். அத அவரு சொல்லக்கூடாதுனு நாம சொல்லக்கூடாது. அண்ணன் திருமாவளவன் தெளிவாக இருக்கிறார். நான் சொல்ற கருத்தை தான் அவரும் சொல்லியிருக்கிறார். இந்த கூட்டணியில் நீடிப்போம் என்பதை அவர் சொல்கிறார். நான் சொல்வதையே அவரும் சொல்கிறார். இங்கு 3வது அணிக்கு வாய்ப்பு என்பது கிடையாது.
தமிழகத்தில் 2 அணிகள் இருக்கின்றன. அங்கு 3வது அணிக்கு இடம் கிடையாது. 3வது அணி வந்தால் வாக்குகள் தான் பிளவுபடுமே தவிர பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றார் அவர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை
டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!
அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!
விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
துளசி.. திருமாலுக்கு உகந்தது.. ஏன் என்று தெரியுமா?
இட்லி கடை படத்தின் டிரெய்லர் வெளியீடு தேதியை அறிவித்த படக்குழு
பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு
ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்
{{comments.comment}}