15 மணி நேரம் தீவிர விசாரணை.. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார் "ED"அதிகாரி அங்கித் திவாரி!

Dec 01, 2023,09:40 PM IST

திண்டுக்கல்: ரூ. 20 லட்சம் லஞ்சப் பணத்துடன் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்  திவாரியை 15 மணி நேர விசாரணைக்குப் பின்னர் திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.


அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி இன்று திண்டுக்கல் அருகே ரூ. 20 லட்சம் பணத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் சிக்கினார். திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபு என்பவரின் வழக்கை முடிப்பதற்காக அவரிடம் ரூ. 3 கோடி வரை லஞ்சம் கேட்டதாகவும், அவர் கொடுக்க மறுத்ததால் அவரை கட்டாயப்படுத்தி ரூ. 20 லட்சம் லஞ்சத்தை அவர் வாங்கியதாகவும்  தெரிய வந்தது.



சம்பந்தப்பட்ட அரசு டாக்டர், லஞ்ச ஒழிப்புப் போலீஸாரிடம் இதுதொடர்பாக முன்கூட்டியே புகார் அளித்துள்ளார். போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில், கெமிக்கல் தடவிய ரூபாய் நோட்டுக்களை அங்கித் திவாரியிடம் அந்த டாக்டர் கொடுத்துள்ளார். அதை வைத்து அங்கித் திவாரியை சேஸ் செய்து போலீஸார் வளைத்துப் பிடித்தனர். 


அதைத் தொடர்ந்து அவரை 15 மணி நேரமாக தீவிர விசாரணைக்குட்படுத்தினர். இந்த விசாரணையின்போது அங்கித் திவாரி பல்வேறு முக்கியத் தகவல்களைத் தெரிவித்ததாக  கூறப்படுகிறது. அவரது லஞ்சப் பணத்தில் பல அதிகாரிகளுக்கு பங்கு போனதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.




டாக்டர் சுரேஷ் பாபுவை மிரட்ட பல உத்திகளைப் பயன்படுத்தியுள்ளார் அங்கித் திவாரி என்று கூறப்படுகிறது. இதற்காக அவர் பிரதமர் அலுவலகத்தின் பெயரையும் பயன்படுத்தியுள்ளார் என்ற தகவல் அதிர வைத்துள்ளது. பல்வேறு விதமாக டாக்டர் சுரேஷ் பாபுவை மிரட்டியுள்ளார் அங்கித் திவாரி. உயர் அதிகாரிகளுக்குப் பங்கு தர வேண்டும் என்றும் அங்கித் திவாரி மிரட்டியுள்ளார். கடுமையாக மிரட்டித்தான் டாக்டர் சுரேஷ் பாபுவை மிரட்டி பணம் பெற்றுள்ளார் அங்கித் திவாரி.


அவரது கைதைத் தொடர்ந்து மதுரையில் உள்ள தென் மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிரடியாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனையில் இறங்கினர். அவர்களை முதலில் உள்ளே விட அமலாக்கத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். ஆனால் போலீஸார் கடுமையாக வாதிட்டும், எச்சரித்ததையும் தொடர்ந்து அதிகாரிகளை உள்ளே அனுமதித்தனர். இதையடுத்து கடந்த 3 மணி நேரமாக அங்கு சோதனை நடந்து வருகிறது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.




இந்த நிலையில் தற்போது விசாரணை முடிந்ததைத் தொடர்ந்து அங்கித் திவாரியை, திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை காவலில் எடுத்து மேலும் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் முடிவு செய்துள்ளனர். மேலும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலும் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.


தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புப் போலீஸார் மிக மிக துல்லியமாக திட்டமிட்டு இந்த கைது நடவடிக்கையை அதிரடியா மேற்கொண்டுள்ளனர். இது தேசிய அளவில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.


சமீபத்திய செய்திகள்

news

கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!

news

Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!

news

கதை கேளு... கதை கேளு!

news

Malliga Selvaraj: அன்னை மடி!

news

தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

அதிகம் பார்க்கும் செய்திகள்