சென்னை: புறநகர், செம்பரம்பக்கம் அருகே தனியார் பேருந்து மோதி மின்சார வாகனமான ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பேட்டரியால் இயக்கப்பட்ட அந்தப் பேருந்து முற்றிலும் தீப்பிடித்து எரிந்து போய் விட்டது.
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு இந்த பேருந்து வந்து கொண்டிருந்தது. செம்பரம்பாக்கம் அருகே வந்தபோது, இந்த தனியார் பேருந்து மீது ஆம்னி பஸ் மோதியது. இதில் ஆம்னி பேருந்து தீ பிடித்து எரிந்தது. தீயை பார்த்து உடனே ஆம்னி பஸ்சில் இருந்த பயணிகள் வேகவேகமாக இறங்கினர். இதனால் உயிர் பலி ஏதும் ஏற்படவில்லை.
ஆம்னி பேருந்தின் பின் பகுதியில் பேட்டரி மற்றும் என்ஜின் இருந்தது. அதில் தீப்பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அனைத்தனர்.
தீயணைப்பு வாகனம் வருவதற்குள் பேருந்து முழுவதும் தீ பரவி பேருந்து எரிந்து போய், எலும்பு கூடாக காட்சி அளித்தது. இந்த தீவிபத்து காரணமாக செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காலையில் நடந்த திடீர் விபத்தால் அந்தப் பகுதியே பரபரப்பாகி விட்டது. குபுகுபுவென பற்றி எரிந்ததால் புகை வான் உயரத்திற்கு எழுந்து காணப்பட்டது.
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}