- சகாயதேவி
அலாஸ்கா: அமெரிக்காவின் பனிப் பிரதேச மாகாணமான அலாஸ்காவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடக்கப்பட்டது. பின்னர் இது திரும்பப் பெறப்பட்டது.
அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது. இதனால் சுனாமி தாக்குதல் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிலநடுக்கத்தின் மையானது கடலுக்குள் 9.3 கிமீ ஆழத்தில் இருந்ததாக யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அலாஸ்காவின் ஆங்கரேஜில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நகரத்திற்கு தெற்கே 12 மைல் தொலைவிலும், ஈகிள் ஆற்றின் தெற்கே இரண்டு மைல் தொலைவிலும் பதிவாகியுள்ளதாக யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்திருந்தது. இருப்பினும், அப்போது எந்தவித சேதமும் ஏற்படவில்லை.
தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒரு வீட்டில் இருப்பவர்கள் குழந்தை, குட்டியோடு வெளியே ஓடும் வீடியோ பரபரப்பாக வைரலாகி வருகிறது. மக்கள் வீடுகளை விட்டும், கட்டடங்களை விட்டும் வெளியே வந்து சாலைகளில் நிற்பதையும் பார்க்க முடிந்தது. ஆங்கரேஜ் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அல்லது அலுவலகத்தில் இருப்போர் டேபிளுக்குக் கீழே தஞ்சமடையும் வீடியோவும் வைரலாகியுள்ளது.
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!
தேனிசை வானில் கலந்தது!
ஊருக்கு தான் உபதேசமா?: முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!
களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?
காவ்யா மாறன் இனி ரஜினிகாந்த்தை எப்படிக் கூப்பிடுவார் தெரியுமா? - அனிருத்துடன் தேதி குறிச்சாச்சு!
தென்தமிழ் தலையங்கம்: உலக காயங்கள் தினம் - கணப்பொழுதில் மாறும் வாழ்க்கை - ஒரு எச்சரிக்கை மணி!
கிளிகள் கூவும் தேனிசை தந்தவர் - தேவா!
{{comments.comment}}