வாக்காளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.. இணைய வழி திருத்தம்.. தேர்தல் ஆணையம் ஏற்பாடு

Nov 18, 2025,02:42 PM IST

- க. சுமதி


சென்னை: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது ஆன்லைன் மூலமாகவும் வாக்காளர்கள் தங்களுக்குத் தேவையான சேவையை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.


தேர்தல் ஆணையக் கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் மொத்தம் வாக்காளர்கள் எண்ணிக்கை 6.36 கோடி பேர் உள்ளனர். இந்த 6.36 கோடி வாக்காள பெருமக்களும் தங்கள்  தனிப்பட்ட தகவல்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதனை சரி செய்து கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சார் பணியானது, நவம்பர் 4ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 4ம் தேதி வரை இது நடைபெறவுள்ளது. 


இப்பணிக்காக தேர்தல் ஆணைய தேர்தல் அதிகாரிகள் வீடுகள் தோறும் சென்று சார் படிவங்களைக் கொடுத்தும், பெற்றும் வருகின்றனர். இதற்கிடையே, வாக்காளர்கள் திருத்தம் என்பது ஒரு மாதத்திற்குள் முடிக்க முடியும் என்பது நடைமுறையில் இயலாத காரியம். எனவே இப்பணியை இணைய வழியிலும் செய்யலாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




இணைய வழியில் திருத்தம் செய்வதற்கான இணைய முகவரி இதுதான் https://voters.eci.gov.in/. இந்த இணைய முகவரிக்குள் உள்நுழைத்து தங்கள் விவரங்களை சரி செய்து கொள்ளலாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


ஆனால் இந்த இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டுமானால், உங்களது வாக்காளர் அட்டையில் உள்ள பெயரும், ஆதார் அட்டையில் உள்ள பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதைப் பயன்படுத்த முடியாது.


இந்த இணையதளத்திற்குள் நுழைந்து, அதில் உங்களது அலைபேசி எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணைக் கொடுத்து புக வேண்டும். ஓடிபியை செலுத்தினால் அந்தப் பக்கத்திற்குள் நீங்கள் நுழைய முடியும். அதன் பின்னர் சார் படிவத்தை கிளிக் செய்து அதில் தேவைப்படும் விவரங்களைக் கொடுக்க வேண்டும். எல்லாவற்றையும் முடித்த பின்னர் E Sign பக்கத்திற்கு அது இட்டுச் செல்லும். அங்கு மீண்டும் உங்களது செல்போனுக்கு ஓடிபி வரும். அதை கொடுத்த பிறகு பதிவேற்றம் நடைபெறும்.


இவ்வளவுதாங்க. எளிய முறையில் இதை செய்ய முடியும். இதற்கு ஒரே ஒரு விஷயம்தான்.. ஆதார் பெயரும், வாக்காளர் அடையாள அட்டை பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும்.


(பெங்களூருவைச் சேர்ந்த க.சுமதி, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல் .. பொங்கலோ பொங்கல் !

news

ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு

news

சபரிமலை மகரஜோதி தரிசனம் 2026...சாமியே சரணம் ஐயப்பா...சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் பரவசம்

news

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு-இடை நிலை ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி-அமைச்சர் தகவல்

news

அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்

news

ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?

news

விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை

news

பொங்கலுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!

news

மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்

அதிகம் பார்க்கும் செய்திகள்