- மஞ்சுளா தேவி
க்விடோ, ஈக்வடார்: ஈக்வடார் நாட்டின் லாஸ் ரியோஸ் மாகாணத்திலிருந்து, இங்கிலாந்து நாட்டின் மிகப் பெரிய தொழிலதிபரும், ஈக்வடார் நாட்டின் முன்னாள் கெளரவ தூதருமான காலின் ஆம்ஸ்ட்ராங், அவரது காதலி காத்தரின் பாவலோ சான்டோஸுடன் சேர்த்து கடத்தப்பட்டுள்ளார்.
காலின் ஆம்ஸ்ட்ராங் ஈக்வடாரில் உள்ள லாஸ் ரியோஸ் மாகாணத்தில் வசித்து வருகிறார். 78 வயதான இவர் ஒரு கோடீஸ்வரர். இவருக்கு சொந்தமான பண்ணையில் இருந்து சனிக்கிழமை அதிகாலை கடத்தப்பட்டதாக ஈக்வடார் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவருடன், அவரது காதலியும் இருந்துள்ளார். போலீஸ் அதிகாரிகள் போல் மாறுவேடமிட்ட 15 பேர் காலின் ஆம்ஸ்ட்ராங்கை கடத்தியுள்ளதாக தெரிகிறது.
தற்போது போலீஸார் காத்தரினை மீட்டுள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆம்ஸ்டிராங்கின் சொத்தைப் பறிக்க இந்த கடத்தல் நடந்திருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
காலின் ஆம்ஸ்டிராங்கை கடத்திய 15 பேரும் பழைய குற்றவாளிகள் என்று சொல்லப்படுகிறது. தென் அமெரிக்க நாடுகளின் மிக முக்கிய குற்றச் செயல் போதைப் பொருள் கும்பல்கள்தான். இந்த 15 பேரும் கூட போதைப் பொருள் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஈக்வடார் நாட்டின் விவசாய நிறுவனமான அக்ரிபாக் நிறுவனத்தை நடத்தி வருகிறார் காலின் ஆம்ஸ்டிராங். இதுதவி டுப்கில் பார்க் எஸ்ட்டேட்டையும் அவர் வைத்துள்ளார்.
தனது தந்தை குறித்து ஆம்ஸ்டிராங்கின் மகளும் கூட கவலை கொண்டுள்ளார். அவர் குறித்த தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!
கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
{{comments.comment}}