செந்தில் பாலாஜி கைதாகி 3 மாதம்.. புதிய ரெய்டுடன் "கொண்டாடிய" அமலாக்கத்துறை!

Sep 12, 2023,10:09 AM IST

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இன்றோடு 3 மாதங்கள் நிறைவடையும் நிலையில் இன்று செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி அதிர வைத்துள்ளனர்.


விடாத கருப்பு என்பது போல செந்தில் பாலாஜியை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது அமலாக்கத்துறை. அவர் மீதான சட்ட விரோத பண மோசடி வழக்கில் 3 மாதங்களுக்கு முன்பு அதிரடி ரெய்டுகள் நடத்திய அமலாக்கத்துறை பின்னர் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. பல மணி நேர விசாரணைக்குப் பிறகு அவரை அதிரடியாக கைது செய்தனர்.




கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி அதை விடஅதிரடியாக நெஞ்சு வலி வந்து துடித்தார். உடனடியாக அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு இதயக் குழாய்களில் அடைப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவரை காவேரி மருத்துவமனையில் அனுமதித்து ஆபரேஷனும் செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.


செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இன்றோடு 3 மாதங்களாகிறது. இன்றும் கூட அமலாக்கத்துறை விடவில்லை. காலையிலிருந்து செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தி வருகிறது அமலாக்கத்துறை. திண்டுக்கல், சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


இன்றைய ரெய்டுக்குள்ளாகியிருப்பவர்களில் முக்கியமானவர்கள் ரத்தினம், ராமச்சந்திரன், கரிகாலன் ஆகியோர்தான். மணல் குவாரி முறைகேடுகள் தொடர்பாக இந்த ரெய்டுகள் நடப்பதாக ஒரு தகவல் கூறுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்