"அடிப்படையே தெரியாதவர்".. அண்ணாமலையுடன் எடப்பாடி பழனிச்சாமி நேரடி மோதல்.. முற்றும் பூசல்!

Apr 16, 2023,10:05 AM IST
சென்னை: ஏங்க அவரைப் பத்தியே பேசறீங்க.. அவர் அடிப்படை தன்மையே இல்லாதவர்.. பேசிப் பேசிய பெரிய ஆள் ஆக வேண்டும் என்று நினைக்கிறார். அவரைப் பற்றி என்னிடம் கேட்காதீங்க என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது நேரடியாக எடப்பாடி பழனிச்சாமி பாய்ந்திருப்பது பாஜகவினரை குறிப்பாக அண்ணாமலை ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

பாஜக - அதிமுக இடையே ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வரலாறு காணாத நெருக்கம் ஏற்பட்டு எதைதச் செய்தாலும் இணைந்தே செய்வது என்ற நிலைக்கு மாறியது. ஆனால் அண்ணாமலை பாஜக தலைவரான பிறகு இந்த நெருக்கத்தில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. அதிலும் சமீப காலமாக எடப்பாடி பழனிச்சாமிக்கும், அண்ணாமலைக்கும் ஒத்தே போகவில்லை.

இருவரில் யார் பெரியவர் என்ற அளவுக்கு மோதல் போய் விட்டது.  அண்ணாமலை தலைவராக இருக்கும் வரை அதிமுக - பாஜக இடையே சுமூகப் போக்கு ஏற்படாது என்று பாஜக மேலிடத்திற்கு அதிமுக தரப்பு தெரிவித்து விட்டதாக சொல்லப்படுகிறது.  அதேபோல அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நான் தலைவர் பதவியை உதறுவேன் என்று அண்ணாமலையும் பாஜக கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்தார்.




இந்த நிலையில் சமீபத்தில் திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிடப் போவதாக அறிவித்த அண்ணாலை அமைச்சர்கள் உள்ளிட்டோரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். அப்போது இப்போது ஆளும் கட்சி மட்டுமல்ல, முன்பு ஆண்ட கட்சியினரின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என்று கூறினார். இது அதிமுகவினரை நேரடியாக சீண்டும் செயலாக பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுகவினர் கொதிப்படைந்துள்ளனர்.

மேலும் என்னை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றால் டெல்லியில் போய் அதைச் செய்யுங்கள் என்றும் அண்ணாமலை தனது செய்தியாளர் சந்திப்பின்போது கூறியிருந்தார். இதுவும் அதிமுக தலைமையை சீண்டுவதாக அமைந்தது. இந்த நிலையில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களைச் சந்தித்தபோது அண்ணாமலை குறித்து கேட்கப்பட்டது.

அண்ணாமலை என்ற பெயரைக் கேட்டதுமே கடுப்பான எடப்பாடி பழனிச்சாமி,  ஏங்க அவரைப் பத்த்தியே பேசறீங்க.. இப்படிப் பேசிப் பேசித்தான் பெருசாகுறார்.. நான் அரசியலுக்கு வந்து 50 வருடமாகிறது. என்ன நடக்கும் ஏது நடக்கும்னு தெரியும். அவர் பேட்டி கொடுத்தே பெரிதாக விரும்புகிறார். தயவு செய்து அவருடைய கேள்வியை கேட்காதீங்க. வேற கட்சி பத்தி கேளுங்க.  அதாவது கட்சியில் இருப்பவர்களுக்கு அடிப்படை தன்மை தெரியணும். அப்படிப்பட்டவர்களைப் பத்திக் கேட்டா நான் பதில் சொல்ல தயார். 

அதை விட்டு விட்டு தன்னை முன்னிலைப்படுத்தோணும்னு நினைக்கிறார். இப்பப் பாருங்க நீங்க பத்து கேள்வி கேட்கறீங்க. அவர் ஏதாவது சொல்லி விட்டுப் போகிறார்.. நீங்களும் வந்து கேட்கறீங்க. இது எங்களைப் போன்ற தலைவர்கள் பதில் சொல்லும் நிலைக்கு வந்து விட்டோம். முதிர்ந்த அரசியல்வாதிகள் குறித்து கேளுங்க பதில் சொல்ல தயார் என்று கூறினார் எடப்பாடி பழனிச்சாமி.

அண்ணாமலைக்கு தகுதி கிடையாது, முதிர்ச்சி கிடையாது, பேசிப் பேசிய பெரிதாக நினைக்கிறார் என்று நேரடியாகவே எடப்பாடி தாக்கியிருப்பது பாஜகவினரை அதிர வைத்துள்ளது. நேரடி மோதலுக்கு எடப்பாடி தயாராகி விட்டார் ���ன்பதையே இது உணர்த்துவதாக கருதப்படுகிறது. இந்த மோதல் எங்கு போய் நிற்கும் என்பது பாஜக மேலிடத்தின் கையில்தான் உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்