ஈரோடு கிழக்கு: இபிஎஸ் அணிக்கே இரட்டை இலை.. தென்னரசு இன்று வேட்பு மனு தாக்கல்

Feb 07, 2023,11:37 AM IST
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அணிக்கே இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தென்னரசு இன்று ஈரோட்டில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.



அதிமுக நான்கு பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது. சசிகலா, தினகரன் ஆகியோர் ஆரம்பத்தில் அதிலிருந்து விலக்கப்பட்டனர். இதில் தினகரன் அமமுக என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். சசிகலாக தனித்து அமைதியாக இருந்து வருகிறார்.

எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர் செல்வமும் இணைந்து செயல்பட்டு வந்தனர். ஆனால் அவர்களுக்குள் பிரச்சினை வரவே தனித்துப் பிரிந்து விட்டனர். அதிமுகவைக் கைப்பற்ற ஓ.பி.எஸ் தீவிரமாக முயன்று வருகிறார். ஆனால் இதுவரை  அவருக்கு அதில் வெற்றி கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தொடர்பாக இவர்களுக்குள் பிரச்சினை வெடித்தது. அது சுப்ரீம்கோர்ட் வரை போனது. வேட்பாளர் யார் என்பதை பொதுக்குழு நடத்தி தீர்மானிக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வேட்பாளர் பெயரை எழுதி ஒரு விண்ணப்பத்தை எடப்பாடி தரப்பு அனுப்பி அதைப் பெற்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது.

மொத்தம் உள்ள 2665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2646 பேருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது. அதில் 2501 பேர் தென்னரசு வேட்பாளராக நியமிக்கப்பட்டதை ஆதரித்து பதிலளித்திரந்தனர். வேட்பாளருக்கு எதிராக யாரும் கருத்து பதியவில்லை. 154 பேர் வாக்கு செலுத்தவில்லை. இந்த ஆவணங்களை நேற்று அவைத் தலைவர் தமிழ்மகன் அசேன், தேர்தல் ஆணையத்திடம் வழங்கினார். அதைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம்,  வேட்பாளர்களுக்கான ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரத்தை தமிழ்மகன் அசேனுக்கு வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் இபிஎஸ் அணிக்கே இரட்டை இலை கிடைக்கும். இதைத் தொடர்ந்து வேட்பாளர் தென்னரசு இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

நிலைமை தங்களுக்குச் சாதகமாக இல்லாத காரணத்தால் தங்களது வேட்பாளர் செந்தில்முருகனை வாபஸ் பெற ஓ.பி.எஸ். தரப்பு முடிவு செய்துள்ளது.  இதன் மூலம் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தொடர்பாக அதிமுகவுக்குள் நிலவி வந்த குழப்பங்கள் முடிவுக்கு வருகின்றன. மறுபக்கம், காங்கிரஸ் வேட்பாளர் தனது பிரசாரத்தை தீவிரமாக நடத்தி வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

news

கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

news

கூலி டிரெய்லர்.. ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்.. லோகேஷ் கனகராஜ் செம தகவல்.. கைதி 2 எப்போ தெரியுமா?

news

டெல்லி கல்லூரி, மும்பை பங்குச் சந்தைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள்.. தீவிர சோதனை!

news

கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்

அதிகம் பார்க்கும் செய்திகள்