சென்னை: அதிமுக மற்றும் பாஜக இணைந்து அமைத்துள்ள கூட்டணிக்கு வருமாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் ஆகியோருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. வழக்கத்தை விட இந்த முறை சற்று பரபரப்பாகவும் போய்க் கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான ஒரு போட்டியை வரப் போகும் தேர்தல் சந்திக்கவுள்ளதாகவும் கருதப்படுகிறது.

காரணம் விஜய்யின் வரவு.. சீமான் கட்சியின் புதிய எழுச்சி.. அதிமுக பாஜக இணைந்து அமைத்துள்ள கூட்டணி ஆகியவை நிச்சயம் திமுகவுக்கு சவால்தான். எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாத நிலையில்தான் திமுக உள்ளது. காரணம் கூட்டணிக் கட்சிகள் சில புதிய கோரிக்கைகள், அழுத்தங்களுடன் காத்துள்ளன. இதையும் சமாளித்தாக வேண்டும். இதை விட முக்கியமாக மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவின் அதிரடிகளையும் அழுத்தங்களையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலும் திமுக உள்ளது.
இந்த நிலையில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சீமான் மற்றும் விஜய்யை மீண்டும் கூட்டணிக்கு அழைத்துள்ளார். ஏற்கனவே சில முறை இருவரையும் அவர் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இப்போது மீண்டும் அதே கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை மக்கள் முழுமையாக வெறுக்கிறார்கள். ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். அது நடக்க வேணடும் என்றால் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள அனைவருமே ஒருங்கிணைவதுதான் ஒரே வழி. அந்த வகையில் சீமானும் சரி, விஜய்யும் சரி திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளவர்கள். அதேபோலத்தான் நாங்களும் உள்ளோம்.

எனவே அதிமுக பாஜக கூட்டணியுடன் இணைந்து திமுக ஆட்சியை அகற்ற முன்வர வேண்டும் என்று சீமானுக்கும், விஜய்க்கும் நான் அழைப்பு விடுத்து வருகிறேன். இருப்பினும் இதுவரை இதுதொடர்பாக அந்தக் கட்சிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை என்றார் எடப்பாடி பழனிச்சாமி.
தனது பேட்டியின்போது தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஒற்றைக் கட்சி ஆட்சி முறையைத்தான் விரும்புவார்கள், ஏற்றுக் கொள்வார்கள் என்றும் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. இதன் மூலம் தேர்தலுக்குப் பின்னர் அதிமுக கூட்டணி ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டால் அதிமுக மட்டுமே ஆட்சியமைக்கும், பாஜகவுக்கு அமைச்சரவையில் இடம் இருக்காது என்பதை மறைமுகமாக அவர் குறிப்பிட்டிருப்பதாக கருதப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமியின் அழைப்பை ஏற்று, சீமானும், விஜய்யும் அதிமுக பாஜக கூட்டணிக்குப் போவார்களா.. இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு விடை.. போகப் போகத்தான் தெரியும்.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}