முட்டை வியாபாரிக்கு ரூ. 6 கோடி ஜிஎஸ்டி வரி..ஜூஸ் வியாபாரிக்கு ரூ. 7..5 கோடி..அதிர வைத்த ஐடி நோட்டீஸ்

Mar 29, 2025,11:21 AM IST

டெல்லி: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த முட்டை வியாபாரிக்கு ரூ. 6 கோடி ஜிஎஸ்டி  வரி பாக்கியைச் செலுத்துமாறும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜூஸ் வியாபாரி ரூ. 7.5 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி வைத்திருப்பதாகவும் வருமான வரித்துறை அனுப்பியுள்ள நோட்டீஸால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சமீப காலமாக இதுபோன்று, சாமானியர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் வருவது அதிகரித்து வருகிறது. சம்பந்தமே இல்லாத நபர்களிடம் இப்படி கோடிக்கணக்கில் வரி பாக்கி இருப்பதாக கூறி நோட்டீஸ் அனுப்புவது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.


மத்தியப் பிரதேச மாநிலம் டமோவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமன். இவர் ஒரு முட்டை வியாபாரி. இவருக்கு சமீபத்தில் ஒரு வருமான வரித்துறை நோட்டீஸ் வந்துள்ளது. அதில், டெல்லியில் ரூ. 50 கோடி மதிப்பிலான பிரின்ஸ் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தோல், மரம் மற்றும் இரும்பு வியாபாரத்தை நீங்கள் செய்து வருகிறீர்கள். கடந்த 2 ஆண்டுகளில் அதிக அளவிலான பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ. 6 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி வைத்துள்ளீர்கள்.  இதை உடனடியாக செலுத்த வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இந்த நோட்டீஸைப் பார்த்து சுமன் அதிர்ச்சி அடைந்து விட்டார். " நான் சாதாரண முட்டை வியாபாரி. தள்ளுவண்டியில் வைத்து முட்டை விற்று வருகிறேன். டெல்லிக்குப் போனதே கிடையாது. பிறகு எப்படி நான் அங்கு நிறுவனத்தை ஆரம்பிக்க முடியும். அதுவும் கோடிக்கணக்கில் பணம் புழங்கும் நிறுவனத்தை எப்படி நான் நடத்த முடியும். அதை விட முக்கியமாக 50 கோடி ரூபாய் பணம் இருந்தால் நான்ஏன் இப்படி கஷ்டப்பட்டு முட்டை விற்கப் போகிறேன் என்று கூறினார் சுமன்.


சுமனின் வழக்கறிஞர் இதுகுறித்துக் கூறுகையில், சுமனின் தனிப்பட்ட ஆவணங்களை யாரேனும் தவறாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதுதொடர்பாக காவல்துறை மற்றும் வருமான வரித்துறையை அணுகியுள்ளோம் என்றார்.


இதேபோல உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்த ஜூஸ் வியாபாரி முகம்மது ரஹீஸ் என்பவருக்கு ரூ. 7.5 கோடி வரி பாக்கி வைத்திருப்பதாக கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதைப் பார்த்து ரஹீஸ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.  தற்போது போலீஸில் இவர் புகார் கொடுத்துள்ளார்.


நம்முடைய ஆதார் எண், பான் எண் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை மிக மிக கவனமாக வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அதை வைத்துத்தான் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு...மாவட்ட வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம்

news

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக ஒழிக்கவே பெயர் மாற்றம் - திருமாவளவன்

news

செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

news

திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி

news

அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!

news

பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!

news

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

news

விஜய் தான் களத்தில் இல்லை.. திடீரென வருகிறார்.. திடீரென காணாமல் போகிறார்: தமிழிசை செளந்தரராஜன்

news

ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்... ஜன.,5ம் தேதிக்குள் வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்