டெல்லி: தேர்தல் பாண்டுகள் மூலமாக கட்சிகள் வாங்கிய பணம் குறித்த விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
2 செட்டுகளாக இந்த விவரத்தை தனது இணையதளத்தில் அப்லோட் செய்துள்ளது தேர்தல் ஆணையம். ஒரு செட்டில் நிறுவனங்கள், தனி நபர்கள் எவ்வளவு பணம் கொடுத்தனர், எப்போது கொடுத்தனர் என்ற விவரம் உள்ளது. 2வது செட்டில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு பணம், எப்போது கொடுக்கப்பட்டது என்ற விவரம் உள்ளது.
ஆனால் எந்தக் கட்சிக்கு யார் பணம் கொடுத்தார்கள் என்ற ஒப்பீடு இதில் இல்லை. இதன் காரணமாக எந்தக் கட்சிக்கு யார் அதிக பணம் கொடுத்தது என்பதை கண்டறிய முடியவில்லை.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இந்த விவரங்களை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தேர்தல் ஆணையத்திடம் பென் டிரைவில் போட்டு வழங்கியது. அதை இன்று தனது இணையதளத்தில் தேர்தல் ஆணையம் அப்லோட் செய்துள்ளது.
லாட்டரி மார்ட்டின் ரூ. 1368 கோடி
லாட்டரி மார்ட்டின் என்று அழைக்கப்படும் மார்ட்டின் மிகப் பெரிய அளவில் தேர்தல் பாண்டுகள் மூலம் நன்கொடை வழங்கியுள்ளார். அதாவது ரூ. 1368 கோடி நன்கொடை கொடுத்துள்ளது. அமலாக்கத்துறை விசாரணையில் அவரது பியூச்சரிங் கேமிங் நிறுவனம் உட்படுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.
இதேபோல மெகா என்ஜீனியரிங் என்ற நிறுவனம் ரூ. 821 கோடி நன்கொடையாக அளித்துள்ளது.
இந்தக் கட்சி அந்தக் கட்சி என்று இல்லை.. தமிழ்நாட்டின் திமுக, அதிமுக முதல் தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ், திரினமூல் காங்கிரஸ், சிவசேனா, ராஷ்டிரிய ஜனதாதளம் என பெரும்பாலான கட்சிகள் தேர்தல் பாண்டுகள் மூலம் பெருமளவில் பணம் பெற்றுள்ளன. இருப்பினும் மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவுக்கே பெருமளவில் நன்கொடைகள் வந்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}