தமிழ்நாட்டில்.. மின்சார கட்டணம் உயர்வு.. ஜூலை 1 முதல் அமல்..!

Jul 16, 2024,05:15 PM IST

சென்னை:  தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 2.18 சதவிகிதம் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால் தற்போது கடந்த வருடத்தை விட இந்த வருடம் கூடுதலாக இரண்டு மடங்கு அதாவது 4.83 சதவிகிதம் மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளது தமிழக அரசு. இதில் வீட்டு உபயோகம், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், ஐடி நிறுவனங்கள், சிறு குறு தொழில்கள் என அனைத்திற்கும் மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மின்சார கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.




மின் கட்டணம் உயர்வு குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு படி புதிய கட்டண விபரங்கள்: 


வீட்டு உபயோகத்திற்காக 0 முதல் 400 யூனிட் வரை மின்சாரம் பயன்பாட்டில், ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 4.60 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூபாய் 4.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 401 முதல் 500 யூனிட் வரை மின்சார பயன்பாட்டில், ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 6.15 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூபாய் 6.45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


601 முதல் 800 யூனிட் வரை மின்சார பயன்பாட்டில் ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 9. 20 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூபாய் 9.65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 801 முதல் 1000 யூனிட் வரை மின்சார பயன்பாட்டில், ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 10.20 ஆக இருந்த கட்டணம் ரூபாய் 10.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


ஆயிரம் யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 11. 25 ஆக இருந்த கட்டணம், தற்போது 11.80 ஆக உயருகிறது. 


ரயில்வே, ராணுவ  வீரர்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 8.15ஆக  இருந்த கட்டணம் தற்போது ரூபாய் 8.55 ஆக உயர்கிறது. அதேபோல் கிராமப்புற குடிசை வீடுகளில் ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 9.35 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூபாய் 9.80 ஆக உயர்த்தப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்