டிவிட்டர் "பறவை"யை பத்தி விட்ட எலான் மாஸ்க்.. புதுசா வந்த "நாய்க்குட்டி"!

Apr 04, 2023,11:13 AM IST
கலிபோர்னியா: டிவிட்டர் லோகோவை மாற்றி விட்டார் எலான் மஸ்க். இது நாள் வரை அழகான நீல நிறத்தில் வசீகரித்து வந்த அந்த பறவை சின்னத்தை மாற்றி, புதிதாக நாய்க்குட்டியை லோகோவாக்கியுள்ளார் எலான் மஸ்க்.

இந்த நாய்க்குட்டி சின்னத்தின் மீது அவருக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு கண் இருந்தது. அதாவது டிவிட்டரை வாங்குவதற்கு முன்பே பறவை லோகோவை மாற்ற வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார் மஸ்க். அதற்குப்பதில் நாய்க்குட்டி லோகோவை கொண்டு வந்தால் எப்படி இருக்கும் என்று கேட்டு டிவீட் போட்டிருந்தார் மஸ்க். தற்போது அதை நிறைவேற்றியுள்ளார்.



புதிதாக வந்துள்ள நாய்க்குட்டியானது, ஷிபா இனு கிரிப்டோகரன்சியின் இலச்சினை ஆகும். இந்த இலச்சினையை டிவிட்டர் லோகோவாக மஸ்க் மாற்றிய பின்னர் அந்த கிரிப்டோகரன்சியின் மதிப்பு 30 சதவீதம் உயர்ந்து விட்டது. இந்த புதிய நாய்க்குட்டி சின்னம் டிவிட்டரிலும் டிரெண்டாகி விட்டது. 

உண்மையில் இந்த நாய்க்குட்டி சின்னமானது கிரிப்டோ கரன்சிகளை கிண்டலடிக்க பயன்படுத்தப்பட்ட ஜோக் மீம் ஆகும். இதைத்தான் தற்போது தனது டிவிட்டரின் சின்னமாக மாற்றியுள்ளார் எலான் மஸ்க். இன்னும் என்னென்ன அக்கப்போர் எல்லாம் பண்ணப் போறாரோ இந்த மஸ்க்.

நாயின் பின்னணி

டாக் காயினின் சிம்பலாக மாறியுள்ள இந்த நாய்க்குட்டிக்கும் ஒரு கதை உண்டு. இந்த நாயின் பெயர் கபோசு என்பதாகும்.  அட்சுகோ சாடோ என்பவர்தான் இந்த நாயின் உரிமையாளர் ஆவார். இதன் முக பாவனை மிகவும் பிரபலமான ஒன்று. இந்த நாயை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் வந்துள்ளன. இந்த நாய்தான் தற்போது டிவிட்டரின் முகமாகவும் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்