கலிபோர்னியா: டிவிட்டரில் அடுத்தடுத்து ஏகப்பட்ட மாற்றங்கள் வரப் போகுது போல. கம்பெனியின் லோகோவை மாற்றிய எலான் மஸ்க் அடுத்து டிவிட்டரின் முக்கிய அம்சங்கள் பலவற்றையும் மாற்றப் போகிறாராம்.
டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், முதல் கட்டமாக பல ஆயிரம் ஊழியர்களை வேலையை விட்டுத் தூக்கினார். அதைத் தொடர்ந்து சரமாரியாக பல்வேறு மாற்றங்களைப் புகுத்தி வருகிறார். அவரது ஒவ்வொரு மாற்றமும் சலசலப்பையே ஏற்படுத்தி வருகின்றன.
சில மாற்றங்கள் பரவாயில்லையே என்று சொல்ல வைத்தாலும், பெரும்பாலானவை குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. முன்பு டிவிட்டரின் லோகோவை நாய்க்குட்டியாக மாற்றியபோது கடும் அதிருப்தி அலை கிளம்பியது. பலரும் எலான் மஸ்க்கை திட்டித் தீர்த்தனர். இதையடுத்து மீண்டும் பறவை லோகோவுக்கே மாறினார் எலான் மஸ்க்.
இந்த நிலையில் தற்போது டிவிட்டரின் லோகோவை மீண்டும் மாற்றி எக்ஸ் என்று அறிமுகப்படுத்தியுள்ளார். ப்ளூ பேர்ட் லோகோவை விட இந்த கருப்பு நிற எக்ஸ் லோகோ சற்று வித்தியாசமானதாகவே இருக்கிறது. இருந்தாலும் இது பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் மேலும் சில மாற்றங்களை செய்யப் போகிறாராம் எலான் மஸ்க்.
அதன்படி டிவீட் என்பதை இனி போஸ்ட் என்றும், ரீட்வீட் என்பதை ரீபோஸ்ட் என்றும் மாற்ற எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளாராம். அதேபோல டிவிட்டர் என்ற பெயரையும் எக்ஸ் என்று மாற்றவும் எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விரைவில் டிவிட்டர்.காம், எக்ஸ்.காம் ஆக பெயர் மாறக் கூடும் என்றும் தெரிகிறது.
ஆக மொத்தத்தில் "இந்த இடத்தில் டிவிட்டர்னு ஒன்னு இருந்துச்சே.. யாராச்சும் பார்த்தீங்களாப்பா" என்று கேட்கும் நிலையை விரைவில் "டிவிட்டர்" சந்திக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}