எலான் Musk ஆகவே இருந்தாலும்.. "மங்கி ரைட்"..  Must-ப்பா.. எப்படி சிக்கிருக்காரு பாருங்க!

Jan 06, 2024,06:33 PM IST

கலிபோர்னியா: எலான் மஸ்க்காகவே இருந்தாலும் மகன் கேட்டாச்சுன்னா.. அதைத் தட்டாமல் செய்தே ஆக வேண்டும்.. தப்பவும் முடியாது, ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. 


டெஸ்லா, டிவிட்டர், ஸ்பேஸ்எக்ஸ் என்று ஏகப்பட்ட கம்பெனிகளை தூக்கிச் சுமக்கும் செம பிசி மனிதர் எலான் மஸ்க். ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இவருக்குப் போதாது. இவரது உலகில் இவர் வைத்துததான் சட்டம்.. தனக்குப் பிடிக்காட்டி எதுவாக இருந்தாலும் தூக்கிப் போட்டு விட்டு போய்ட்டே இருப்பார்.. அதுவே தனக்கு ஏதாவது பிடித்து விட்டால்.. அதை வம்படியாக வாங்கிப் போட்டு விடுவார்.. டிவிட்டரை வாங்கியது போல.


டிவிட்டரின் உரிமையாளராக மாறியது முதல் அவர் செய்யாத மாற்றம் இல்லை. ஏதாவது ஒன்று நடந்து கொண்டதோன் உள்ளது. ஆரம்பத்தில் பலருக்கும் இது கடுப்பாக இருந்தது.. "சும்மா இர்ரா" என்று எஸ்.ஜே. சூர்யா ரேஞ்சுக்கு எலான் மஸ்க்கைப் பார்த்துப் புலம்பி வந்தனர். ஆனால் இப்போது யாரும் எதுவும் சொல்வது இல்லை.. காரணம் மஸ்க் இப்படி செய்யாமல் இருந்தால்தானே ஆச்சரியம் என்று எல்லோரும் எதார்த்தத்தைப் பழகிக் கொண்டு விட்டனர்.




மஸ்க் ஒரு "Big Family Man".. 2 மனைவியர் மூலம் 11 குழந்தைகள் அவருக்கு உள்ளன.  முதல் மனைவி பெயர் ஜெனீபர் ஜஸ்டின்.. இவர் மூலம் மஸ்க்குக்கு 6 குழந்தைகள், அதில் முதல் குழந்தை பிறந்த சில வாரங்களிலேயே இறந்து விட்டது. 2வது மனைவி பெயர் தலுலா ரைலி. இவர்கள் இருமுறை திருமணம் செய்து, இருமுறை விவாகரத்தும் செய்தனர். இதுதவிர கிரிம்ஸ் மற்றும் ஷிவோன் ஜில்ஸ் ஆகியோர் மூலம் மேலும் 5 குழந்தைகளுக்குத் தந்தை ஆனார் எலான் மஸ்க்.


மஸ்க்கின் குழந்தைகள் 11 என்றால், அவர் உறவு வைத்துக் கொண்ட பெண்களின் எண்ணிக்கை நிறையவே உண்டு. அதுக்குள்ள இப்ப நாம போக வேண்டாம்.. நாம பார்க்கப் போறது மஸ்க்கின் இன்னொரு பக்கத்தை.. அதுவும் அவரே பகிர்ந்து கொண்டுள்ள ஜாலியான பக்கத்தை.


மஸ்க்கின் மகன்களில் ஒருவர்தான் எக்ஸ்.. 3 வயசு குட்டிப் பையன். இந்தப் பையனின் முழுப் பெயர்.. X Æ A-12 Musk.. இதை எப்படி உச்சரிப்பது என்பதை நீங்களே கூகுள் செய்து கண்டுபிடிச்சுக்கங்க..  காதலி கிரிம்ஸ் மூலமாக மஸ்க்குக்குப் பிறந்த பையன் இவன்.


இந்தப் பையனுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மஸ்க். அதில்,  இந்த குட்டிப் பையன் எக்ஸ் என் முதுகில் ஜாலியா தொங்கிட்டிருக்கான்.. மங்கி ரைட் கூட்டிக் கொண்டு போகச் சொல்லி சேட்டை பண்ணிட்டிருக்கான் என்று கூறியுள்ளார் மஸ்க். சும்மா சொல்லக் கூடாது.. பையனும் நல்லா உடும்புப் பிடியா மஸ்க் கழுத்தைப் பிடிச்சு தொங்கிட்டிருக்கான்.


மஸ்க்காகவே இருந்தாலும் மங்கி ரைட் மஸ்ட்தானே.. காரணம், "எக்ஸ்" தளத்துக்கு வேண்டுமானால் இவர் பாஸ் ஆக இருக்கலாம்.. ஆனால் லிட்டில் "எக்ஸுக்கு" இவர் அப்பாவாச்சே!

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்