"நமஸ்தே" போட்டு.. இந்தியர்களை குஷியாக்கிய எலான் மஸ்க்!

Sep 25, 2023,09:54 AM IST
கலிபோர்னியா: டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் அவ்வப்போது ஏதாவது செஞ்சுட்டேதான் இருப்பார். அந்த வகையில் ஒரு ரோபோ நமஸ்தே சொல்வது போல போட்டோ போட்டு இந்தியர்களை குஷியாக்கியுள்ளார்.

டிவிட்டரை வாங்குவதற்கு முன்பே ஏதாவது செய்து பரபரப்பை தக்க வைத்துக் கொண்டேதான் இருப்பார் எலான் மஸ்க்.  சென்டர் ஆப் அட்ராக்ஷனாக இருக்கும் அவரது டிவீட்டுகள். ஒரு கட்டத்தில் டிவிட்டர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை சொல்லிக் கொண்டே இருந்தார். அப்போதே பலரும் சொன்னார்கள் பேசாமல் நீங்களே டிவிட்டரை ஒரு விலை போட்டு வாங்கி சரி பண்ணுங்களேன் என்று.



\இந்த நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் டிவிட்டரை விலைக்கு வாங்கி அனைவரையும் அதிர வைத்தார். அன்று ஆரம்பித்தது புதுப் பஞ்சாயத்து.. டிவிட்டரை மாற்றுகிறேன் என்று கூறிக் கொண்டு பல ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கினார். ஏகப்பட்ட மாற்றங்களைக் கொண்டு வந்தார். அத்தோடு நில்லாமல் ஏதாவது அதிரடியைக் காட்டிக் கொண்டே இருந்தார்.

பேஸ்புக் மார்க்குடன் வம்பிழுத்துக் கொண்டிருந்தார். யாரையும் விட்டு வைப்பதில்லை. இப்படி டிவிட்டரை கலகலப்பாக்கிக் கொண்டேதான் இருக்கிறார் எலான் மஸ்க். இந்த நிலையில் திடீரென ஒரு ரோபோ நமஸ்தே சொல்வது போன்ற புகைப்படத்தைப் போட்டு இந்தியர்களை கெஸ் விளையாட்டுக்கு கொண்டு போயுள்ளார்.

சோழியன் குடுமி சும்மா ஆடாதே.. இந்தியாவைப் பற்றி இவர் ஏதோ சொல்கிறார் என்றால் இந்தியாவுக்கு வந்து என்னமோ செய்யப் போகிறார் என்று அர்த்தம் என்று பலரும் விவாதித்துக் கொண்டுள்ளனர். சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா போயிருந்தபோது அவரை எலான் மஸ்க் சந்தித்துப் பேசினார். அப்போது டெஸ்லா ஆலை நிச்சயம் இந்தியா வரும் என்றும் கூறியிருந்தார். பிரதமரையும் பாராட்டியிருந்தார்.

இந்த நிலையில் இவர் வைத்துள்ள இந்த "நமஸ்தே" எதற்காக என்று தெரியவில்லை.  பார்ப்போம் என்ன செய்யப் போறார்னு.

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி

news

அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

news

பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

news

திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்