"2 இல்லையாம்.. மூனாம்" .. அதிர வைக்கும் எலான் மஸ்க்கின் மறுபக்கம்!

Sep 10, 2023,04:03 PM IST

கலிபோர்னியா: டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க்குக்கு 3 குழந்தைகள் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


எலான் மஸ்க் மற்றும் அவரது முன்னாள் காதலியான கிரிம்ஸ் ஆகியோருக்கு 2 குழந்தைகள் இருப்பதாகத்தான் இதுவரை நம்பப்பட்டு வந்தது. ஆனால் அந்த ஜோடிக்கு 3 குழந்தைகள் இருப்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்த தகவலை The New York Times நாளிதழ் வெளியிட்டுள்ளது.


The New York Times.. எலான் மஸ்க் வாழ்க்கை வரலாறு குறித்த ஒரு ஆய்வு நூலை எழுதியுள்ளது. விரைவில் வெளியாகவுள்ள அந்த நூலில்தான் இந்த விவரம் இடம் பெற்றுள்ளதாம். செப்டம்பர் 12ம் தேதி இந்த நூல் வெளியிடப்படவுள்ளது.





எலான் மஸ்க் மற்றும் கிரிம்ஸ் ஆகியோரின் 3வது குழந்தையின் பெயர் டெக்னோ மெக்கானிக்கஸ் என்பதாகும். இது ஆண் குழந்தை.  இந்தக் குழந்தை எப்போது பிறந்தது என்பது உள்ளிட்ட பிற தகவல்கள் இதுவரை தெரியவில்லையாம்.  இந்தக் குழந்தையையும், அதுகுறித்த பிற தகவல்களையும் எலான் மஸ்க், கிரிம்ஸ் ஆகியோர் ரகசியமாக வைத்துள்ளனராம்.


எலான் மஸ்க்குக்கு 3 பெண்கள் மூலம் மொத்தம் 10 குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  கிரிம்ஸின் உண்மையான பெயர் கிளேர் பெளச்சர் என்பதாகும். இவர் கனடாவைச் சேர்ந்தவர். 35 வயதான இவருடன் 2018ம் ஆண்டு முதல் 2022 வரை காதல் கொண்டிருந்தார் எலான் மஸ்க். இந்த இடைப்பட்ட காலத்தில்தான் இந்த 3 குழந்தைகளை மஸ்க் பெற்றுள்ளார்.


இந்த ஜோடியின் முதல் குழந்தையின் பெயர் என்ன தெரியுமா.. சொன்னா ஆச்சரியப்படுவீங்க.. X Æ A-Xii.. என்பதாகும். அதை சுருக்கமாக சொல்வதானால் X.. இப்ப புரியுதா என் டிவிட்டர் பெயரை மஸ்க் மாற்றினார்னு.. அவருக்கு இந்த எக்ஸ் என்ற எழுத்தின் மீது அத்தனை பாசம். மே 2020ல் இந்தக் குழந்தை பிறந்தது. அடுத்து Y  எனப்படும் பெண் குழந்தை 2021 டிசம்பரில் பிறந்தது. இதன் முழுப் பெயர் Exa Dark Sideræl Musk என்பதாகும். இந்த இரண்டு குழந்தைகள் குறித்த தகவல்கள்தான் இதுவரை வெளியில் தெரிந்தது. இந்த நிலையில்தான் தற்போது 3வது குழந்தை குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

எலான் மஸ்க்கின் முன்னாள் மனைவி பெயர் ஜஸ்டின் வில்சன். இவரும் கனடாதான். இவர் மூலம் மஸ்க்குக்கு 7 குழந்தைகள் பிறந்தன. அதில் முதல் குழந்தை ஆண், அந்தக் குழந்தை சிட்ஸ் என்ற வியாதி காரணமாக பிறந்த 10 வாரத்திலேயே இறந்து விட்டது. 

மஸ்க்கின் பயோகிராபியை வால்டர் ஐசக்சன் என்ற பத்திரிகையாளர் எழுதியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக இதற்காக மஸ்க்குடன் பேசி தகவல்களைப் பெற்று இந்த நூலை எழுதியுள்ளார் வால்டர் ஐசக்சன்.

சமீபத்திய செய்திகள்

news

அதிரடியாக ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை... சவரன் 76,000த்தை கடந்தது!

news

திராவிட அரசு பொய்யான, மோசடியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது: அன்புமணி!

news

கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்: பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!

news

Pillaiyar: விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வந்தது எப்படி?

news

விஷால்- சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்...பிறந்தநாளில் எளிமையாக நடந்தது

news

சிறுநீரக கற்களைத் தடுக்கலாம்.. கவலைப்படாம.. இதைக் கொஞ்சம் பாலோ பண்ணிப் பாருங்க

news

இங்கிலாந்து சென்று தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க போகிறேன்: முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்!

news

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க.. திமுக கையில் இருக்கும் 4 மேட்டர்!

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.520 உயர்வு!

அதிகம் பார்க்கும் செய்திகள்