"ஒண்டிக்கு ஒண்டி.. வர்றியா".. மார்க் ஜக்கர்பர்க்கை.. கூவி கூவி அழைக்கும் மஸ்க்!

Aug 16, 2023,09:37 AM IST
கலிபோர்னியா: மெட்டா நிறுவனத்தின் மார்க் ஜக்கர்பர்க்கை விடாமல் சண்டைக்கு அழைத்து டீஸ் செய்து கொண்டே இருக்கிறார் டிவிட்டர் உரிமையாளரான எலான் மஸ்க். இந்த காமெடி உரையாடல்கள் தற்போது கலகலப்பை மட்டுமல்லாமல், சலசலப்பையும் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன.

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே எலான் மஸ்க் செய்து வரும் அலப்பறைகள் ஓவராகவே உள்ளன. அதையெல்லாம் ஏற்கனவே நிறைய பேசிட்டோம், எழுதிட்டோம்.. இப்போது அவர் செய்து வரும் லேட்டஸ்ட் அம்பல்களைப் பார்ப்போம்.



சமீபத்தில் டிவிட்டருக்குப் போட்டியாக திரெட்ஸ் என்ற செயலியை களம் இறக்கியது மெட்டா நிறுவனம். இது எலான் மஸ்க்கை காண்டாக்கி விட்டது. காப்பி அடித்து விட்டார்கள், நாங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய தொழில்நுட்பத்தை சுட்டு விட்டார்கள். விட மாட்டேன், கேஸ் போடுவேன் என்று கடுப்பாக பேசி வந்தார் மஸ்க். கூடவே மார்க்கை ஒண்டிக்கு ஒண்டி சண்டைக்கு வர்றியா என்றும் காமெடியாக கேட்டிருந்தார் மஸ்க்.

மார்க்கும் விடவில்லை, நான் ரெடி மாமே.. லொக்கேஷனை அனுப்பு என்று மஸ்க்கை பதிலுக்கு சீண்டியிருந்தார். மஸ்க்குக்குத்தான் டிரோல் செய்வதெல்லாம் ரஸ்க் சாப்பிடுவது போலாச்சே விடுவாரா என்ன.. அவரும் பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில்,லாஸ் வேகாஸில் வச்சு ரெண்டு பேரும் குத்துச் சண்டை போடுங்க என்று பலரும் வந்து கலாய்த்தனர். இத்தாலியில் உள்ள கொலோசியம்தான் சூப்பரான லொக்கேஷன்.. அங்க வச்சுக்கலாம் மாம்ஸ்களா என்றும் சிலர் கலாய்த்தனர்.

இப்போது இந்த காமெடியான உரையாடல்கள் செய்தியாகும் அளவுக்கு சீரியஸாகி விட்டன. இதை வைத்து எலான் மஸ்க் லேட்டஸ்டாக ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் 

Fight Recap:

ஜக்குடன் சண்டை போடுவது குறித்து நான் ஜோக்கடித்திருந்தேன்
ஜக், லொக்கேஷனை அனுப்புங்க என்று பதிலளித்திருந்தார்
கொலொசியத்தில் சண்டை போடுமாறு ஆலோசனைகள் குவிந்தன
அதையும் ஜக் மறுத்து விட்டார்
சரி எங்கேயும் வேண்டாம்.. உங்க ஏரியாவுலேயே வச்சுக்கங்க.. பாதுகாப்பா இருக்கும் என்றேன் நான்
அவரோ,  நான் டிராவலில் இருக்கிறேன் என்று கூறி விட்டார்
எப்பத்தான் நாங்க சண்டை போடுவது.. அவர் என்கூட சண்டைக்கு வர மாட்டாரா? என்று கேட்டு மறுபடியும் கலாய்த்துள்ளார் மஸ்க்.



அவவன்.. ஊருல நாட்டுல.. ஆயிரத்து 8 பிரச்சினைகளோட அல்லாடிட்டு இருக்கான்.. இந்த இரண்டு "பூமர்"களும், பல ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்குனது மட்டுமல்லாம, இப்படி ஜாலியா வெட்டிப் பேச்சு பேசி பொழுதைப் போக்கிட்டு இருக்குதுங்க.. இதுக்கெல்லாம் ஒரு என்டே இல்லையா!

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்

news

திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்

news

விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!

news

திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை

news

2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!

news

திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு

news

தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

news

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்