துபாய்: துபாயிலிருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்குச் சென்ற எமிரேட்ஸ் விமானம், 13 மணி நேர பயணத்திற்குப் பின்னர் மீண்டும் துபாய்க்கே வந்து தரையிறங்கியது.

இதுவரை உலக அளவில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மிக மிக அரிதானது. அந்த வரலாற்றைப் படைத்து விட்டது இந்த எமிரேட்ஸ் விமானம். வெள்ளிக்கிழமை காலையில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் ஆக்லாந்து புறப்பட்டது. ஆனால் வழியிலேயே ஆக்லாந்தில் பலத்த வெள்ளம் காரணமாக விமான நிலையம் மூடப்பட்டிருந்த தகவல் கிடைத்தது.
இதனால் விமானம் ஆக்லாந்து செல்லாமல் பாதி வழியிலேயே திரும்பி மீண்டும் துபாய்க்கே கொண்டு வந்து தரையிறக்கினர். வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிவாக்கில் கிளம்பிய விமானம், கிட்டத்தட்ட 13 மணி நேர பயணத்திற்குப் பின்னர் சனிக்கிழமை நள்ளிரவு வாக்கில் மீண்டும் துபாயில் தரையிறங்கியது.
கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆக்லாந்து சர்வதேச விமான நிலையம் சேதமடைந்திருந்தது. இதனால் சில நாட்களுக்கு விமானங்களை அங்கு இயக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனால்தான் விமான நிலையத்தை மூடினர். நேற்று முதல்தான் அங்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பிரியாணிக் காதல்!
வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை
தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!
இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு
Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!
Evening Motivation: கதையல்ல நிஜம்: அந்தக் காலம் vs இந்தக் காலம்!
தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!
“மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க முதலமைச்சரே!”: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!
நகைகள்.. அன்று மாதவி அணிந்த ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா?
{{comments.comment}}