சென்னை: கல்கி படம் பார்த்தேன். என்ன ஒரு காவியம். இந்திய சினிமாவை வேறு லெவலுக்கு கொண்டு சென்றுள்ளார் இயக்குநர் நாக் அஸ்வின் என்று கல்கி படக்குழுவினரை பாராட்டியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
பாகுபலி புகழ் பான் இந்தியா ஸ்டார் ஆன பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் கடந்த 27ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ஷோபனா, தீபிகா படுகோனே, திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட முக்கிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தில் மிருணாள் தாக்கூர், அன்னா பென், விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான் மற்றும் பிரம்மானந்தம் உள்ளிட்ட நட்சத்திங்கள் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளார். அவர் தான் இரண்டாம் பாகத்துக்கான அடித்தளமாக உள்ளார். 2வது பாகத்தில்தான் அவரது நடிப்பு புயல் காத்திருப்பதாக தெரிகிறது.
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படம் 2 நாட்களில் மட்டும் ரூ.275 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகியுள்ளது. மகாபாரத கதையை அறிவியல் தொழில்நுட்பத்துடன், நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பல்வேறு கற்பனைகளைக் கலந்து அசாத்திய கற்பனையால் உருவாக்கி ரசிகர்களை மிரட்டலான அனுபவத்தை ஏற்படுத்தும் அளவிற்கு இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர்.
பைரவர் என்ற ஒரு வேட்டைக்காரரின் கதையைச் சொல்கிறது. இது ரசிகர்களுக்கு ஒரு புது வித அனுபவத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை எனலாம். இப்படம் உலகம் முழுவதும் சுமார் 4000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் வாழ்த்து
இந்நிலையில், கல்கி 2898 ஏடி படத்தை பார்த்த பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "கல்கியைப் பார்த்தேன். ஆஹா! என்ன ஒரு காவியம்! இயக்குநர் நாக் அஸ்வின், இந்திய சினிமாவை வேறு லெவலுக்கு கொண்டு சென்று உள்ளார். என் அன்பு நண்பர்களுக்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அஸ்வினி தத், அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன் மற்றும் கல்கி குழுவுக்கு வாழ்த்துக்கள். கல்கி 2898 ஏடி இரண்டாம் பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்" என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிளாஸ்டிக் இல்லாத உலகம் அமைப்போம்.. இன்று International Plastic Bag Free Day!
3வது நாளாக தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் எவ்வளவு உயர்வு தெரியுமா?
கல்யாணமாகி 45 நாள்தான் ஆச்சு.. கணவர் கதையை முடித்த மனைவி.. காரணம் மாமா!
SORRY’மா... 'மாண்புமிகு' சொல்லல்ல செயல்.. முதல்வர் குறித்து டி.ஆர்.பி. ராஜா நெகிழ்ச்சி டிவீட்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 03, 2025... இன்று இவங்களுக்கு தான் மகிழ்ச்சியான நாள்
சிபிஐ வசம் திருப்புவனம் அஜீத்குமார் வழக்கு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கையோடு இதையும் செய்ய வேண்டும்!
இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த டாக்டர் மீது 2011ம் ஆண்டு மேசாடி புகார் பதிவு!
திமுக அரசின் மீது படிந்துள்ள இரத்தக் கறை ஒருபோதும் விலகாது: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
கல்யாணத்திற்குப் பின்பு எல்லாவற்றையும் விட்டு விட சொன்னார் ஷமி.. மனைவி ஹசின் ஜஹான்
{{comments.comment}}