ஈரோடு கிழக்குத்.. இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்.. யார் யாருக்கு என்ன சின்னம்?

Jan 22, 2025,10:30 AM IST

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் 46 வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் கொண்ட பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். 


ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவான ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து, அத்தொகுதியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். பின்னர் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் என  தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து திமுக தரப்பில் வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதே சமயத்தில் பாஜக, அதிமுக, தேமுதிக, தவெக உள்ளிட்ட பிரதான கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன.


ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த ஜனவரி 10 ஆம் முதல் தேதி  17ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். பிறகு வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். 


இடைத்தேர்தலில் போட்டியிடும் 46 வேட்பாளர்கள் மற்றும்  சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியலை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.  அதில்,வேட்பாளர் பெயர் மாற்றும் சின்னங்களின் விவரம் பின்வருமாறு:-




அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி வேட்பாளர்கள்


சந்திரகுமார் (திமுக) - உதயசூரியன்

சீதாலட்சுமி (நாம் தமிழர் கட்சி) -ஒலிவாங்கி (மைக்)


அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி


சவுந்தர்யா (சமாஜ்வாடி கட்சி) -மிதிவண்டி


பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள்


முனி ஆறுமுகம் (பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி) -மின்கல விளக்கு

ஆனந்த் சுப்ரமணி (மறுமலர்ச்சி ஜனதா கட்சி) -மின் கம்பம்

கந்தசாமி (நாடாளும் மக்கள் கட்சி) ஆட்டோ ரிக்ஷா

சவிக்கா (சமானிய மக்கள் நலக்கட்சி) -மோதிரம்

செல்லபாண்டியன் (தேசிய மக்கள் சக்தி கட்சி) -ஷூ

தர்மலிங்கம் (இந்திய ஜன சங்கம் கட்சி) வெண்டைக்காய்

பிரபாகரன் (அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம்) -பலாப்பழம்

மதுரை விநாயகம் (வீரோ கி விர் இந்தியன் கட்சி) -தலைக்கவசம்

முத்தையா (தாக்கம் கட்சி) - தீப்பெட்டி

முனியப்பன் (அனைத்து ஓய்வூதியதாரர்கள் கட்சி) -வளையல்கள்


சுயேச்சை வேட்பாளர்கள்


அக்னி ஆழ்வார் -ஏழு கதிர்களுடன் கூடிய பேனாவின் முனை

அமுதரசு -தென்னந்தோப்பு

ஆனந்த் -கப்பல்

இசக்கிமுத்து நாடார் -சீர்வரிசை பொருட்கள்

ரவி -அலமாரி

ராமசாமி -பேனா தாங்கி

கலையரசன் -பிரஷர் குக்கர்

கார்த்தி-நடைவண்டி

கிருஷ்ணமூர்த்தி-பலூன்

 கோபாலகிருஷ்ணன்- மட்டை பந்தடி வீரர்

சங்கர்குமார்-மணிஆரம்

சத்யா-வார்ப்பட்டை

சாமிநாதன்- கியாஸ் சிலிண்டர்

சுப்பிரமணியன் -பென்ஞ்

 செங்குட்டுவன் சாலை உருளை

செல்லக்குமாரசாமி -மிதிவண்டி காற்றடிக்கும் குழாய்

தனஞ்ஜெயன் - பைனாகுலர்

திருமலை- பரிசு பெட்டகம்

நூர் முகமது-பிஸ்கெட்

பஞ்சாட்சரம்-கிரிக்கெட் மட்டை

பத்மராஜன்-டயர்கள்

பரமசிவம்-கரும்பலகை

பரமேஸ்வரன்-படகோட்டியுடன் கூடிய பாய்மர படகு

பவுல்ராஜ்-வைரம்

பாண்டியன்-பெட்டி

மதுமதி-ரொட்டி

முகமது கைபீர்-ரொட்டி சுடும் கருவி

 முருகன்-செங்கல்

ராஜசேகரன்-கைப்பெட்டி

ராஜமாணிக்கம்-புருசு (பிரஷ்)

 லோகநாதன்-வாளி

லோகேஷ் சேகர்-கேக் வெண்ணிலா-கணக்கீட்டுப்பொறி (கால்குலேட்டர்)


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்