Exclusive: லோக்சபா தேர்தலில் பாஜக 100% வெற்றி பெறும்.. பாஜகவில் இணைந்த.. நடிகை ஆர்த்தி நம்பிக்கை

Apr 09, 2024,06:28 PM IST

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகை ஆர்த்தி கணேஷ் இன்று பாஜகவில் இணைந்தார். வருகிற மக்களவைத் தேர்தலில் பாஜக 100 சதவீத வெற்றியைப் பெறும் என்று ஆர்த்தி அடித்துக் கூறியுள்ளார்.


தமிழ் சினிமாவில் சிறந்த குணசித்திர நடிகையாகவும், காமெடி நடிகையாகவும்  வலம் வருபவர் நடிகை ஆர்த்தி கணேஷ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு,  உள்ளிட்ட மொழிகளில் குழந்தை நட்சத்திரமாகவே சுமார் 65 படங்களில் நடித்துள்ளார்.  நகைச்சுவை நடிகர் கணேஷ்கரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் சேர்ந்து பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.


லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், சமீபத்தில் நடிகை ராதிகா சரத்குமார் பாஜகவில் இணைந்து அக்கட்சி சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக தீவிர பிரச்சாரமும் செய்து வருகிறார்.


இந்த நிலையில் நடிகை ஆர்த்தி கணேஷ்கர் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இவருடைய கணவர் கணேஷ்  ஏற்கனவே பாஜகவில் உள்ளது நினைவிருக்கலாம்.  ஆர்த்தி கணேஷ் அவர்களை மகிழ்வுடன் வரவேற்பதோடு, தமிழக மக்களுக்காகப் பணியாற்ற முன்வந்திருக்கும் அவருக்கு, மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்  கொள்கிறோம் என பாஜக தெரிவித்துள்ளது.




பாஜகவில் இணைந்தது குறித்து நடிகை ஆர்த்தி கணேஷ்கர், நமது தென்தமிழ் இணையதளத்திற்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது:


உங்க கணவர் ஏற்கனவே பாஜகவில் இருக்கிறதுனால நீங்க பாஜகவில் சேர்ந்து இருக்கீங்களா.. அல்லது தனிப்பட்ட காரணம் எதுவும் இருக்கா..?


எனக்கு அண்ணாமலை ஜி, மோடிஜி, தமிழிசை அக்கா மூன்று பேரும் எப்படி அரசியலை அணுகுறாங்க அப்படிங்கறது புடிச்சிருந்தது. அதனால் தான் நான் பாஜகவில் சேர்ந்தேன்.


நீங்க, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட திட்டம் ஏதும் இருக்கா..?


ஆமா இருக்கு. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நான் பிரச்சாரம் செய்வேன்.


உங்கள் அரசியல் பணி எந்த மாதிரி இருக்கப் போகுது..?


அதை நீங்க, அடுத்து பாக்க தான் போறீங்க.


நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்று கருத்துக்கணிப்பு நிறைய வருகிறது. உங்களுடைய கருத்து என்ன..?


அவரு சிங்கம். இந்தியாவை தலை நிமிர வைக்கிறவர். எல்லோருக்கும் உலகத்தை சுற்றி பார்க்க வேண்டும் என ஆசை இருக்கும். ஆனால் உலகமே சுற்றிப் பார்க்கிற அளவுக்கு பாரத தேசத்தை முன்னுக்குக் கொண்டு வந்துட்டாரு. ஒரு பிரண்ட்லி நேஷனாக வளர்த்துட்டாரு. அதனால அவர் மேல நிறைய நம்பிக்கை இருக்கு அவர் இன்னும் நிறைய செய்வார்னு.


தமிழ்நாட்டில் பாஜகவின் வாய்ப்பு எப்படி இருக்கும்.. எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்று நினைக்கிறீர்கள்..?


100% பாஜக வெற்றி பெறும். தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று கூறினார் நடிகை ஆர்த்தி கணேஷ்கர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்