நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயதேயான இளம் பெண் டிக்டாக் பிரபலம் திடீர் மரணத்தை சந்தித்திருப்பது அதிர வைத்துள்ளது.
அந்தப் பெண்ணுக்கு தொடர்ந்து தலைவலி இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் அவர் மரணத்தைத் தழுவியுள்ளார். அவரது பெயர் ஜெஹேன் தாமஸ். இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர். டிக்டாக்கிலும் பிரபலமாக வலம் வந்தார். அவருக்கு ஆப்டிக் நியூரிட்டிஸ் என்ற நரம்பியல் பிரச்சினை இருந்துள்ளது. இதுகுறித்து சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவும் போட்டிருந்தார். இதனால் கண்கள் வீங்கிய நிலையில் அவர் காணப்பட்டார். கண்ணில் உள்ள பார்வை நரம்பு வீங்கியதால் இந்த கண் வீக்கம்.
இந்த நிலையில் அவர் தற்போது மரணமடைந்து விட்டார். தொடர் தலைவலியால் அவதிப்பட்டு வந்த அவர் நரம்பியல் பிரச்சினை முற்றி மரணத்தைத் தழுவியுள்ளார். டிக்டாக்கில் 72,000 பாலோயர்கள் இவருக்கு உள்ளனர்.
முதலில் அவருக்கு மன அழுத்தம் காரணமாக தலைவலி வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில்தான் அவருக்கு நியூரிட்டிஸ் நரம்பியல் கோளாறு இருப்பது தெரிய வந்தது. இதனால் அவர் கடும் அவதிக்குள்ளாகியிருந்தார். தன்னால் தலைவலியை தாங்கவே முடியவில்லை என்றும் இன்ஸ்டாகிராமில் அவர் பதிவு போட்டிருந்தார்.
ஜெஹேன் தாமஸுக்கு 2 மகன்கள் உள்ளனர். தாயை இழந்த இரு குழந்தைகளும் பெரும் சோகத்தில் உள்ளனராம்.
தலைவலி தொடர்ந்து இருந்தால் உரிய மருத்துவரை அணுகி உரிய பரிசோதனையை மேற்கொள்வது அவசியம். சாதாரண தலைவலிதானே என்று இருந்து விடாதீர்கள்.
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
பேசா ஓவியம்.. ஒரு நிமிடக் கதை (37)
யானை சவாரி!
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
டெல்லிக்கு ராஜான்னாலும் ஆச்சி சொல்லைத் தட்டாதே !
எட்டு எட்டா மனித வாழ்வை பிரிச்சுக்கோ - ஏன் பிரிச்சு வச்சிருக்காங்க தெரியுமா?
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
பிரியாணிக் காதல்!
வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை
{{comments.comment}}