சென்னை : சர்வதேச திரைப்பட விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கிடா படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் தீபாவளி ரிலீசாக வெளியிடப்பட உள்ளது.
அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில் உருவான படம் தான் கிடா. திரைப்படத்தின் டிரெய்லர் இணைய ரசிகர்களிடம் பாராட்டுக்களையும், கைத்தட்டல்களையும் குவித்து வருகிறது.இப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு கிடா திரைப்படம் பாரட்டுக்களை குவித்துள்ளது. இப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மதுரை உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஆட்டுக்கும் உள்ள உறவையும் பாசத்தையும் சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் கதை, தீபாவளி திருநாளில் நடக்கும் நிகழ்வை குறிக்கும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதால், இப்படத்தை தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
உலக அளவில் பல பாராட்டுக்களை இப்படம் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது.
சமீபகாலமாக தொடர்ந்து வன்முறைக்களமாக இருக்கிறது தமிழ் சினிமா. அதிலிருந்து மாறுபட்டு எளிமையான உணர்வுகளை, அழகாக சொல்லும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. வாழ்வியல் யதார்த்தங்களை இப்படம் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதை இப்படத்தின் டிரெய்லர் வெளிப்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!
Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!
மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!
கண்டிகை அரசுப் பள்ளியில் "Language Expo 2026".. ஆங்கில மொழித் திருவிழா கோலாகலம்!
பழனி கோயில் நில மோசடி: 3-ஆவது நாளாக சிபிசிஐடி அதிரடி சோதனை
தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
{{comments.comment}}