சென்னை: ரசிகர் ஒருவர் இறந்ததை அடுத்து, தனது ரசிகர்கள் தனக்காக பயணம் செய்யக்கூடாது. அவர்களுக்காக தான் பயணம் செய்து அவர்களின் ஊரிலேயே போட்டோ ஷூட் நடத்த முடிவு செய்துள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் உணர்ச்சி பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் நாளை விழுப்புரம் யோகலட்சுமி மஹாலில் ரசிகர்களுக்காக முதல் முதலாக போட்டோ ஷூட் தொடங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும், நடன இயக்குனராகவும், நடன அமைப்பாளராகவும் வலம் வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அம்மாவின் மீது கொண்டுள்ள அதீத அன்பால் இவர் அம்மாவுக்கு சிலை வைத்து வணங்கி வருகின்றார். இது மட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு தனது டிரஸ்ட் மூலம் உதவியும் செய்தும் வருகிறார். கடைசியாக இவர் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று ஹிட் கொடுத்தது. இதனை அடுத்து நிறைய வாய்ப்புகள் லாரன்ஸ்சுக்கு வரத் தொடங்கியுள்ளன.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், விஜயகாந்த் மகன் சண்முகப் பாண்டியன் நடிக்கும் படைத்தவன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
தமிழ் நடிகர்களுடன் இணைந்து போட்டோ எடுப்பதற்காக பல ரசிகர்கள் சென்னைக்கு வருவது வழக்கம். இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு கடலூரை சேர்ந்த சேகர் என்ற ரசிகர் ஒருவர் லாரன்ஸுடன் போட்டோ சூட் எடுப்பதற்காக சென்னை வரும் வழியில் விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த ராகவா லாரன்ஸ் இறந்த ரசிகரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு, தன்னை யாரும் பார்க்க வர வேண்டாம். தானே நீங்கள் உள்ள இடத்திற்கு வருகிறேன் என்று கூறியுள்ளார். இதற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், வணக்கம் .. நண்பர்களே.. ரசிகர்களே.. கடந்த முறை சென்னையில் ரசிகர்கள் போட்டோ ஷூட் சந்திப்பின்போது எனது ரசிகர் ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். இது மிகவும் மன வேதனையாக இருந்தது. என் ரசிகர்கள் எனக்காக பயணம் செய்யக்கூடாது. அவர்களுக்காக நான் பயணம் செய்து அவர்களின் ஊரில் போட்டோ ஷூட் நடத்த முடிவு செய்துள்ளேன். நாளை முதல் தொடங்குகிறேன். முதல் இடம் விழுப்புரம் யோகலட்சுமி மஹாலில் உள்ளது. நாளை சந்திப்போம் என லாரன்ஸ் கூறியுள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}