சென்னை: பாதிப்புக்குள்ளான நெற்பயிர்களுக்கு ஏக்கர் ₹50,000 வீதம் நிவாரணம் வழங்கிடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக குறுவை நெல் சாகுபடியில் அறுவடை செய்த சுமார் 8,000 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மன வேதனையளிக்கிறது. அறுவடை செய்து 10 நாட்கள் கழிந்தும் நெல்மூட்டைகளைக் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் பல மாத உழைப்பை உதாசீனப்படுத்தியுள்ள அரசின் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது.

விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் திமுக அரசு நெல் கொள்முதலைத் துரிதப்படுத்த வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனாலும், அலட்சியப்போக்குடன் செயல்பட்டு, நெல்மூட்டைகளை சேதப்படுத்தியது மட்டுமன்றி அறுவடைக்குத் தயாராக இருந்த 1,00,000ற்கும் அதிகமான ஏக்கர் நெற்பயிர்களையும் தண்ணீரில் மிதக்கவிட்டு விவசாயப் பெருமக்களைக் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது திமுக அரசு.
எனவே, நானும் டெல்டாக்காரன் தான் என விளம்பர வசனம் பேசும் முதல்வர் சுக ஸ்டாலின் அவர்கள், அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் போர்க்கால அடிப்படையில் உடனடியாகக் கொள்முதல் செய்திடவும், பாதிப்புக்குள்ளான நெற்பயிர்களுக்கு ஏக்கர் ₹50,000 வீதம் நிவாரணம் வழங்கிடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}