யாரை நம்பறதுன்னே தெரியலை.. 5 வயது மகளை குளிக்க வைத்தபோது.. பாலியல் தொல்லை கொடுத்த தந்தை!

Sep 03, 2024,03:46 PM IST

சென்னை: தாம்பரம் அருகே தனது 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் கேட்போரின் மனங்களை பதைபதைக்க வைத்துள்ளது.


பாலியல் அத்துமீறல்கள், வன்மச் செயல்கள், வக்கிரச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. யார் எவர், வயது வித்தியாசம், என்று எந்த விவஸ்தையும் இல்லாமல் இதுபோன்ற அக்கிரமச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இது மக்களை அதிர வைத்துள்ளது.  இந்த நிலையில் பெற்ற தந்தையே தனது மகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து சிக்கியுள்ளார். என்ன கொடுமை என்றால் அந்தக் குழந்தைக்கு வயது 5தான்.




சென்னை மேற்கு தாம்பரம் பகுதியில் வசித்து வருபவர் சௌந்தரராஜன். இவருக்கு வயது 37. இவருக்கு ஏழு வயது மற்றும் ஐந்து வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.  நேற்று சௌந்தர்ராஜன் தனது ஐந்து வயது இளைய மகளை குளிக்க வைத்துள்ளார். அப்போது  எதேச்சேயாக பாத்ரூமுக்கு வந்த மனைவி, தனது கணவர் மகளிடம் தவறுதலாக நடந்ததை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார்.


அப்போதுதான், குளிக்க வைக்கும்போதெல்லாம் இந்த வக்கிரச் செயலில் கணவர் ஈடுபட்டு வந்தது தெரிய வந்து வேதனைக்குள்ளானார் மனைவி. அத்தோடு நிற்காமல், தனது கணவர் குறித்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  

புகாரின் அடிப்படையில் சௌந்தரராஜனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இச்செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தற்போது பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சமீபத்தில் தான் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறுமிகளை பாலியல் தொல்லைக்கு உட்படுத்திய சம்பவமும் நெஞ்சை நெகிழ வைத்தது என்பது நினைவிருக்கலாம்.


மகாத்மா காந்தி சுதந்திரம் வாங்கி கொடுத்து என்ன பயன். என்றைக்கு பெண்கள் தனியாக.. சுதந்திரமாக .. பாதுகாப்பாக‌.. வெளியில் சென்று வீடு திரும்புகிறார்களோ அன்றைக்குதான் சுதந்திரம்.


இதற்கிடையே, கடந்த மாதம் 30ஆம் தேதி வால்பாறையில் கல்லூரி மாணவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய வழக்கில் கைதான மூன்று பேராசிரியர்கள்  சஸ்பென்ஸ் செய்யப்பட்டு இன்று பொள்ளாச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலியாக.... ரூ.3000 கோடி ஏற்றுமதி பாதிப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

news

மாஸ் காட்டும் எடப்பாடி பழனிச்சாமி...அதுக்குள்ள இவ்வளவு விஷயம் பண்ணிட்டாங்களா?

news

PM Modi Japan Visit: 7 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

news

மோடி தலைமையிலான மத்திய அரசு திமுக அரசை விட முன்னோடியாக செயல்படுகிறது: அண்ணாமலை தாக்கு!

news

மிகப்பெரிய தொழில்துறை பணியாளர்களைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.. டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்

news

இறக்குமதி வரியால் பாதிப்படைந்தவர்களுக்கு வாராக்கடன் விதிகளை தளர்த்த வேண்டும் : எம்.பி.சு வெங்கடேசன்

news

uncle என விஜய் சொன்னது...டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன பதில்

news

புற்றுநோய் சுற்றுலாவால் ஹிமாச்சல் பிரதேசம் பாதிப்பு.. இப்படியே போனால்.. நிபுணர்கள் எச்சரிக்கை

news

2038ல் 2வது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்.. எர்னஸ்ட் அன்ட் யங் தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்