டெல்லி: லோக்சபா தேர்தல் திருவிழாவின் கடைசி நாள் இன்று. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உட்பட 57 தொகுதிகளில் இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் சென்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக திட்டமிடப்பட்டது. முதல் கட்டம் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு, மூன்று என ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வந்தது. இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. இந்த ஏழு கட்டங்களுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஏழு கட்டங்களுக்கான தேர்தல் முடிவுகள் அன்றே வெளிவர உள்ள நிலையில், இதற்காக இந்திய முழுவதும் உள்ள மக்கள் ஆர்வத்துடன் காத்து வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 தொகுதிகளும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொத்தம் 13 தொகுதிகள் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 13 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், சத்தீஸ்கரில் ஒரு தொகுதி, ஒடிசா ஒடிசாவில் 6 தொகுதிகள், இமாச்சல பிரதேசத்தில் நான்கு தொகுதிகள் என மொத்தம் 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் 904 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். 10.02 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.
எக்சிட் போல்களை செட்டப் செய்து விட்டது பாஜக.. மக்களே நம்பாதீர்கள்.. இந்தியா கூட்டணி கோரிக்கை!
இறுதி கட்ட தேர்தலுக்காக 1.09 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கி மாலை 6:00 மணிவுடன் நிறைவடைகிறது. இதற்காக பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள், என அனைவரும் ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
மேலும் இந்த இறுதி கட்ட தேர்தல் அமைதியுடனும் குழப்பங்கள் இல்லாமலும் நடைபெற வாக்குச் சாவடிகளில் கூடுதலாக துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ரசிகர்களே.. உங்களது அன்புக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தையே இல்லை.. அஜீத் குமார்நெகிழ்ச்சி!
ஈரோடு கிழக்கில் களம் காணும் ஆசிரியை சீதாலட்சுமி.. வேட்பாளரை அறிவித்தார் சீமான்.. 2வது முறையாக போட்டி
இயற்பெயர்களுக்கு திரும்பும் முன்னணி நடிகர்கள்... தமிழ் சினிமாவின் புதிய டிரெண்ட்.. அப்போ ரஜினி?
தமிழ்நாடு முழுவதும் களை கட்டிய பொங்கல் திருநாள்.. வீடுகள் தோறும் Happy Pongalo Pongal!
சீறிப் பாயும் காளைகள்.. விறுவிறு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. பொங்கல் நாளில் கோலாகலம்!
பொங்கல் பண்டிகை 2025 : தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்.. நோட் பண்ணிக்குங்க!
மகிழ்ச்சி பொங்கட்டும்.. நல்லிணக்கம் வளரட்டும்.. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பொங்கல் வைக்கும் நேரத்தில் நாளை மழை பெய்யுமா.. என்ன சொல்கிறது வானிலை மையம்?
மாடு பிடிமாடு.. அதிகமாக பிடிச்சது யாரு.. இந்தா பிடி காரு.. களைகட்டப் போகும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
{{comments.comment}}