டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்க பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்தாண்டிற்கான பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் கட்டமாக ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறுகிறது. பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசிக்க உள்ளார். இவர் வாசிக்கும் எட்டாவது பட்ஜெட் இதுவாகும். முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி நடைபெற உள்ளது.

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஜனவரி 31ம் தேதி தொடங்கும் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றி தொடங்கி வைக்க உள்ளார். அதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது. வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பங்குச்சந்தைக்கு விடுமுறை விடப்படும். இந்த முறை பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி 1 சனிக்கிழமை என்பதால், அன்று பங்குச்சந்தை இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட கூட்டத்தொடர் முடிந்ததும் விடுமுறை விடப்பட்டு, அதன்பின்னர் 2ம் கட்டம் மார்ச் 2வது வாரத்தில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2வது கூட்டத்தொடர் பிரதமர் நரேந்திர மோடியின் பதிலுரையுடன் முடிவடையும்.
கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற பட்ஜெட்டின் போது தான் தங்கத்தின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக அன்றைய நாள் தங்கத்தின் விலை 3 முறை மாற்றம் கண்டது. அதுமட்டும் இன்றி தங்கத்தின் விலையும் அதிரடியாக குறைந்தது என்பது நினைவிருக்கலாம். இந்த முறை வருமான வரிச் சலுகைகள் தரப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
வயலா எலுமிச்சை.. எங்கள் ஊரின் பசுமை பொக்கிஷம்!
'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு
தேசத் தந்தை தேசத்தின் விந்தை .. நற்குணம்விற்ற நாட்டுச் சந்தை.. அகிம்சை தலைவன்!
சக்தி வாய்ந்த அகிம்சை போராளி.....!
கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்...யார் அவர்கள்? பரபரக்கும் அரசியல் களம்
விண்ணமுதம்!
தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி
என்ன சொல்ல...!
{{comments.comment}}