சென்னை: நாதகவின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள காளியம்மாளின் பெயர் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக அடிபடத் தொடங்கியுள்ளது.
நாகப்பட்டனத்தைச் சேர்ந்தவர் காளியம்மாள். மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த மிக சாதாரண பெண்மணி. பிகாம், எம்பிஏ படித்தவர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக காளியம்மாள் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டு பிரபலமானார். இவரின் அதிரடியான பேச்சு அப்போது மீனவர் சமுதாயத்தையும் தாண்டி அனைத்துத் தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்தது.
அந்தத் தேர்தலுக்குப் பிறகு காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் மட்டுமல்லாமல், அதையும் தாண்டி பிரபலமாகி விட்டார். பிறகு காளியம்மாளுக்கு மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஆக பதவி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கட்சியில் சிறப்பாக பணியாற்றி வந்தார் காளியம்மாள். அவர் இல்லாத நாம் தமிழர் மேடையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி வந்தார். டிவி விவாதங்களிலும் அதகளப்படுத்தினார். யூடியூப் விவாதங்களிலும் கலக்கி வந்தார்.

ஒரு கட்டத்தில் காளியம்மாளின் வளர்ச்சி படு வேகமாக மாறியதால் கட்சியின் இதர முக்கியஸ்தர்கள் பீதி அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின. சீமானே கூட சற்று யோசித்துப் பார்த்ததாகவும் கூட தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில்தான் சீமான், காளியம்மாளை அவதூறாகப் பேசியதாக ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம்தான் காளியம்மாளையும் கூட அதிர வைத்தது. அதன் பிறகு அவர் தனது செயல்பாடுகளை படிப்படியாக குறைக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியாத அளவுக்கு அமைதியாகி விட்டார். இப்போது அவர் கட்சியை விட்டு விலகப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எது எப்படியோ, நாம் தமிழர் கட்சியால்தான் காளியம்மாள் தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகமானார் என்றாலும் கூட, அவரது செயல்பாடுகளால் கட்சிக்கும் மிகப் பெரிய இமேஜ் கிடைத்தது என்பதை மறுத்து விட முடியாது. காளியம்மாள் போல பலர் நாம் தமிழர் கட்சியில் உள்ளனர். அனைத்து செங்கல்களும் சேர்ந்ததுதான் நாம் தமிழர் கட்சி என்ற கட்டடம். இதில் ஒரு செங்கல்தானே போகிறது என்று கட்சித் தலைமை சாதாரணமாக எடுத்து விடக் கூடாது.. ஒவ்வொரு செங்கல்லாக போனால், கட்டடம் என்னாகும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
சீமானிடம் பிற கட்சிகளிடம் இல்லாத நல்ல கொள்கைகள் பல உள்ளன. அந்தக் கொள்கைகளை அவரது சில செயல்பாடுகள் தரைமட்டமாக்கி விடுகின்றன. அதை சரி செய்ய சீமான் முயல வேண்டும் என்பது அவரது நலம் விரும்பிகளின் கோரிக்கை. காளியம்மாள் போனால் நிச்சயம் நாம் தமிழர் கட்சிக்கு இழப்புதான்.
மேகதாது வழக்கு: தமிழக உரிமையை மீட்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சி தந்த அதிர்ச்சி!
பல்கலைக்கழக விவகாரம்... நிர்வாகமும், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை
தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை மையம் அலர்ட்!
இன்னும் கொஞ்சம் யோசித்தால்.. இயற்கையை நேசித்தால்!
பெற்று வளர்த்த தாய்மடி
மறைத்த அன்பு.. மலரின் வேரில் மறைந்த கதை.. மீண்டும் மங்கலம் (9)
சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து.. நவம்பர் 16ல் தவெக போராட்டம்?.. விஜய் வருவாரா??
ரயில் நிலையங்களில் இட்லி சரியில்லையா.. சாம்பார் டேஸ்ட்டா இல்லையா.. QR கோட் மூலம் புகார் தரலாம்
{{comments.comment}}