சென்னை: மீன் பிடி தடைக்காலம் தமிழ்நாட்டில் முடிவடைந்த நிலையில் மீன்கள் அதிக அளவில் கிடைக்காத காரணத்தால் விலை உயர்ந்து காணப்படுகிறது. இதற்கிடையே கேரளாவில் தற்போது மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளதால் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 15 முதன் ஜூன் 14ம் தேதி வரை மீன்களின் இனபெருக்க வளர்ச்சி காரணமாக மீன்பிடி தடைகாலம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த தடைக்காலம் ஆண்டு தோறும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் ஏதும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் இருக்கும். 61 நாட்களுக்கு இந்த மீன் பிடித தடைக்காலம் நடைமுறையில் இருப்பதால், விசைப்படகுகள் கரையோரம் கட்டி வைக்கப்படும். இந்த ஆண்டிற்கான தடை காலம் தற்போது முடிவடைந்து விட்டது.
இந்நிலையில், விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் தங்களுக்கு தேவையான ஐஸ் மற்றும் பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டு ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். ஒரு சில படகுகள் ஒரு வாரமும், ஒரு சில படகுகள் ஒரு நாளிலும் கரை திரும்புவது வழக்கம். இதில் ஒரே நாளில் திரும்பும் படகுகள் மூலமாக பிடிக்கப்பட்ட மீன்கள் காசிமேடு மீன் சந்தையில் நேற்று விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மீன் கிடைக்கவில்லை. இதனால் காசிமேடு சந்தையில் மீன் விலை அதிகமாக இருந்தது. விசைப்படகுகள் மூலமாக பிடிக்கப்படும் மீன்கள் காசிமேடு மீன் சந்தையில் ஏலம் முறையில், மீன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏல விற்பனை இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை நடைபெற்று வரும். இந்த விற்பனையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் வாங்கி சென்று மீன் விற்பனை செய்து வருகின்றனர்.
விலையைப் பொருத்தவரை பெரிய வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1300க்கும், சிறிய வஞ்சிரம் கிலோ ரூ.600க்கும், வவ்வால் கிலோ ரூ. 600க்கும், கொடுவா கிலோ ரூ. 500க்கும், சங்கரா கிலோ ரூ.400க்கும், கடம்பா கிலோ ரூ. 450க்கும், இறால் கிலோ ரூ. 400க்கும், கானாங்கெளுத்தி கிலோ ரூ. 400க்கும், பாறை கிலோ ரூ. 600க்கும் என விற்பனை செய்யப்பட்டது.
இந்தநிலையில், அடுத்து கேரளாவில் மீன் பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது. இதனால் கேரளாவுக்கும் தமிழ்நாட்டிலிருந்து மீன் செல்லும். எனவே தமிழ்நாட்டில் அதிக அளவில் மீன் கிடைத்தால்தான் சப்ளையை சரி செய்து விலையையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இல்லாவிட்டால் வரும் நாட்களில் மீன் விலை மேலும் உயரும் வாய்ப்பே அதிகம் உள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}