ஆத்தாடி கண் கொள்ளாக் காட்சி.. இரு கரைகளையும் தொட்டபடி ஓடும் மதுரை வைகை ஆறு!

Nov 25, 2023,05:28 PM IST

மதுரை: மதுரையில், வைகை ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததால் நல்ல மழை பொழிவு ஏற்பட்டது. இதனால் வைகையணையில் நீர் கொள்ளவை எட்டியது. இதனால் உபரி நீர் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது. வைகை அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மதுரையை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களுக்கு மொபையில் போனில் sms அலார்ட்டும் விடப்பட்டு வருகிறது. மழை அதிகரித்துள்ளதால் அணைகளில் நீர் மட்டம் உயரத்தொடங்கியுள்ளது. அந்த வகையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை வெளுத்தெடுத்ததால் அணையின் நீர்மட்டம் 67 அடியை தாண்டியது.




மொத்த கொள்ளளவு 71 அடி என்பதால் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து சுமார் 6000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் வைகை அணை நீர் பாசன மாவட்டங்கள் பயனடையும். வைகை அணையில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் மதுரை மாநகரில் வைகையில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. 


வைகை ஆற்றின் இரு கரைகளையும் ஆரத் தழுவியபடி வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இந்த நிகழ்வு அபூர்வ நிகழ்வாகும் என்பதால் ஆற்றில் வெள்ள பெருக்கை காண மக்கள் திரண்ட வருகின்றனர். அதேசமயம், மதுரை மாநகரில் வைகை ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ, கால்நடைகளைக் குளிப்பாட்டவோ, துணிகளை துவைக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக, திறந்து விடப்பட்ட தண்ணீர் இது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




மதுரை சிம்மக்கல் ஏ.வி.மேம்பாலம் பகுதியில் இரு கரைகளைத் தொட்டு புது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. யானைக்கல் தரைப்பாலம் தண்ணீரில்  மூழ்கியது. இருகரையோரமும் வாகனங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.


https://youtu.be/jTGiXnsvTOs?si=fEyweA0PBo15akxS

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்