Flashback 2023: "மணமாலையும் மஞ்சளும் சூடி".. ரெடின் கிங்ஸ்லி முதல்.. கோலி சோடா கிஷோர் வரை!

Dec 14, 2023,06:58 PM IST
- மஞ்சுளா தேவி

சென்னை: மெல்ல மெல்ல விடை பெற்றுச் செல்லத் தயாராகி வருகிறது 2023ம் ஆண்டு. இந்த ஆண்டின் தொடக்கம் முதல் இப்போதுவரை Eventful வருடம் என்பதில் சந்தேகமில்லை. இந்த வருடத்தில் திரையுலகில் பல திருமணங்கள் நடந்துள்ளன.

2023 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, திரையுலகில் நிறைய சந்தோஷங்களும் நடந்துள்ளன. பல துக்க சம்பவங்களும் கூட நடந்துள்ளன.  இதில் முதலில் நாம் சந்தோஷத்தைப் பார்ப்போம்.

திருமணம் என்பது வாழ்வில் ஒவ்வொருவரின் வாழ்விலும் நடக்கும், மறக்க முடியாத சுப நிகழ்ச்சியாகும். வாழ்நாள் வரை கூடவே இருக்கும் வாழ்க்கை துணையுடன் கரம் கோர்க்கும் அந்த பந்தத்தில் இந்த வருடம் பல திரை மற்றும் வெள்ளித்திரைப் பிரபலங்கள் நுழைந்துள்ளனர்.



அரண்மனைக்கிளி மற்றும் திருமகள் தொலைக்காட்சி தொடரில் நடித்த  நடிகை சங்கீதாவின் திருமணம் திடீரென நடந்து முடிந்து பலரையும் வியப்புக்குள்ளாக்கியது. சிறந்த நகைச்சுவை நடிகரான ரெடின் கிங்ஸ்லியை டிசம்பர்10ல் திருமணம் செய்து கொண்டார் நடிகை சங்கீதா. ரெடினுக்கு இப்பத்தான் கல்யாணமே ஆகிறதா என்று பலரும் ஆச்சரியப்பட்டனர்.. ஆனால் இந்த ஜோடியை மனதார வாழ்த்தி மகிழ்ந்தனர்.

தொலைக்காட்சி நடிகரும், நகைச்சுவை நடிகருமான தமிழ்ச்செல்வன் அபியும் நானும் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இவருக்கும் இந்த ஆண்டு திருமணம் நடந்தது. நவம்பர் 28 அன்று தனது காதலி பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

"பாவம் கணேசன்" தொடரில் நடித்து வெகுவாக பாராட்டப்பட்ட நடிகை ஹிமோனா மரியா ஜேம்ஸ் தனது நீண்ட கால நண்பரான  கிரண் நாத் தோனலுடன் இணைந்ததை மகிழ்ச்சியுடனும், அன்புடனும் வெளிப்படுத்தினார்.




இதேபோல பிக் பாஸ் புகழ் கவின் - மோனிகா திருமணம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. கவின் இப்போது சினிமாவில் பிரபலமாக இருந்து வருகிறார். தேர்ந்தெடுத்து அவர் நடிக்கும் படங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அசோக் செல்வனும் இந்த வருடமே திருமண பந்தத்தில் நுழைந்தார். நடிகர் அருண்பாண்டியனின் மகளும், நடிகையுமான கீர்த்தி பாண்டியனை அவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் செப்டம்பர் 13 திருநெல்வேலியில் நடைபெற்றது.

தவமாய் தவமிருந்து சீரியலில் நடித்த பிரிட்டோ மனோ, சீரியல் நடிகை சந்தியா ராமச்சந்திரனை மார்ச் 30 இல் திருமணம் செய்து கொண்டார்.




நடிகை லாவண்யா தேவி தொழிலதிபர் பிரசன்னாவை திருப்பதியில் நண்பர்கள் சூழ திருமணம் செய்து கொண்டனர்.  இதேபோல ராஜா ராணி 2 புகழ் நடிகை சந்தியா ராமச்சந்திரன் தொலைக்காட்சி நடிகர்  பிரிட்டோ மனோவை மணந்தார்.

கனா காணும் காலங்கள் சீசன் 2 வில் நடித்த தீபிகா வெங்கடாசலம் - ராஜா வெற்றி பிரபுவை மே மாதம் கரம் பிடித்து கணவன் மனைவி ஆனார்கள்.

ரோஜா மற்றும் சீதாராமன் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான பிரியங்கா நல்காரி, தொழிலதிபர் ராகுல் வர்மாவை திருமணம் செய்து கொண்டார்.

சுந்தரி சீரியலில் கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்த அரவிஷ் திருமகள் சீரியலில் நடித்த பிரபல நடிகை ஹரிகாவை காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.





வானத்தைப்போல சீரியலில் "ராஜபாண்டி" கதாபாத்திரத்தில் நடித்த அஷ்வின் கார்த்திக் தனது காதலியான காயத்ரியை நவம்பர் மாதம் மணந்தார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த அகிலன், அக்ஷயா ஜோடிக்கு செப்டம்பர் 13ஆம் தேதி திருமணம் நடந்தது. கார்த்திகை தீபம் சீரியல் நாயகி ஹர்திகா, சரஞ்சித் அப்பு என்பவரை செப்டம்பர் 8ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

தெய்வம் தந்த வீடு, வானத்தைப்போல மற்றும் நினைத்தாலே இனிக்கும் தொடர்களில் நடித்த ப்ரீத்தா குமார் கோலி சோடா படத்தின் நாயகன் வசந்த கிஷோரை மார்ச் 21ல் மணந்தார்.

சமீபத்திய செய்திகள்

news

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!

news

நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!

news

புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்

news

10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?

news

எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி

news

74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!

news

தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)

news

கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்