புதுடில்லி: இந்தியாவில் அதிகாலை 3 மணி முதல் நாவிமான சேவைகள் படிப்படியாக சீராகி வருவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10, 11 இயங்குதளத்தில் ஏற்பட்ட திடீர் பாதிப்பு காரணமாக நேற்று முதல் பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஐடி, மீடியா, ஏர்லைன்ஸ், வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை, டெல்லி, மும்பை போன்ற விமான நிலையங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விரைவில் சேவையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு சரிசெய்யப்பட்டு இயல்பு நிலை திரும்பும் எனவும், சிக்கல்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக Microsoft நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகமாக இருந்தது. குறிப்பாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஆகிய விமான நிறுவனங்களின் ஆன்லைன் செக்-இன், போர்டிங் ஆகிய பணிகள் முடங்கின. இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,நாடு முழுவதும் விமான சேவைகள் படிப்படியாக சீராகி வருவதாகவும், அதிகாலை 3 மணி முதல் விமான நிலையங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவன இயங்குதள பிரச்சனையால் நேற்று ஏற்பட்ட பிரச்சனை படிப்படியாக சீராகி வருகிறது. இன்று மதியத்திற்குள் அனைத்தும் சரியாகும் என எதிர்பார்க்கிறோம். விமான நிலையங்களின் செயல்பாடுகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ரத்தான விமான பயணங்களுக்கான கட்டணம் திருப்பி தருவது உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}